செவ்வாய், 1 மே, 2018

ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(HRA) மற்றும் நகர ஈட்டுப்படி(CCA) சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை மற்றும் பரமத்தி ஒன்றியக்கிளைகளின் கூட்டுக்கூட்டம்...

வணக்கம்.

ஈரோடு  மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(hra) மற்றும் நகர ஈட்டுப்படி(cca) சார்ந்து
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை
மற்றும் பரமத்தி 
ஒன்றியக்கிளைகளின் கூட்டுக்கூட்டமும், பரமத்தி மன்றக்கிளையின் சார்பில்  மன்ற கொடியேற்றம் நிகழ்வும் 01.05.18 (செவ்வாய்)
முற்பகல் 07.30மணிக்கு பரமத்தியில் (ஊ.ஒ.தொ.பள்ளியில்) நடைபெறுகிறது. 

ஆகவே கபிலர்மலை ஒன்றியப் பொறுப்பாளர்கள், இவ்வொன்றியத்தை சார்ந்த மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்களும் தவறாது பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

                   நன்றி
              மெ.சங்கர்

பரமத்தி மன்றம்~மே தின கொடியேற்றம் மற்றும் செயற்குழுக்கூட்டம் அழைப்பிதழ்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
பரமத்தி  ஒன்றியம்(கிளை).
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பரமத்தி மன்றம் மே தின கொடியேற்றம் மற்றும் செயற்குழுக்   கூட்டம் அழைப்பிதழ்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இடம்:
உதவித்தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு &ஊ.ஒ.தொ.பள்ளி,
பரமத்தி. 

நாள்:
01.05.18(செவ்வாய்)
முற்பகல் 07.30மணி.

தலைமை:
நா.ரங்கசாமி,
ஒன்றியத் தலைவர்.
     
முன்னிலை:
திரு.முருக செல்வராசன் மாவட்டச் செயலாளர் அவர்கள் மே தின இயக்கக் கொடியினை ஏற்றி இயக்கவுரை ஆற்றுகிறார்.

பொருள்:

1)ஜாக்டோ-ஜியோவின் 
மே 8-சென்னை முற்றுகைப்
போராட்டத்தில் பரமத்தி மன்ற உறுப்பினர்களை பெருமளவில்  பங்கேற்றல்.சென்னைக்கு பயண ஏற்பாடு செய்தல்.

2)ஒன்றிய மகளிர் மற்றும் இணை  பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல்.    

 3)ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி) நிலை வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் நகர ஈட்டுப்படி (CCA)சார்ந்து பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்ட அளவில் கூட்டு
நடவடிக்கையில் பங்கேற்றல்.

 4)ஆசிரியர் பிரச்சனைகள்.

5) ஒன்றிய மகளிர் அணியினர் பங்கேற்பினை வலுப்படுத்துதல். 

பங்கேற்று சிறப்பிக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள்  இக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
அன்புடன்...
க.சேகர்
ஒன்றிய செயலாளர்.

திங்கள், 30 ஏப்ரல், 2018

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள் மே 2ல் அறிவிக்கப்பட உள்ளன...


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை.

கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன் பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்' என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்

புதிய கருவி கண்டுபிடிப்பு~ போதையில் இருந்தால் வாகனம் ஸ்டார்ட்- ஆகாது...

பார்வைத் திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் குச்சிகளுக்கு மாற்றாக சென்சார் வசதியுள்ள வழிகாட்டும் கருவி...

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு MPhil, PhD படிக்க தடையின்மை சான்று~ ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப உத்தரவு…

2017-18 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி 8.55 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது நிதியமைச்சகம்...

திராவிடப் பேரொளி பேரறிஞர்.அண்ணா~ நம் அண்ணாவை முழுமையாக அறிந்து கொள்ள…

எம்பி, எம்எல்ஏ ஓய்வூதியத்திற்கு விலக்கு அளிப்பது போல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்~ ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தீர்மானம்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாவட்ட மகளிரணி கூட்டம் அழைப்பிதழ்... [இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை,இராசிபுரம். நாள்:01.05.18(செவ்வாய்) பிற்பகல் 03.00மணி]


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாவட்ட மகளிரணி கூட்டம்அழைப்பிதழ்...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இடம்: 
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
பாரதிதாசன் சாலை,இராசிபுரம்.

நாள்:
01.05.18(செவ்வாய்)பிற்பகல் 03.00மணி

பொருள்:

1)ஜாக்டோ-ஜியோவின் 
மே 8-சென்னை முற்றுகைப்
போராட்டத்தில் பெண்ணாசிரியர் பெருமளவில்  பங்கேற்றல்.சென்னைக்கு பயண ஏற்பாடு செய்தல்.

2)பெண்ணாசிரியர்
கல்விச்சுற்றுலா ஏற்பாடுசெய்தல் 
பெண்பொறுப்பாளர்கள் மற்றும் பெண்ணாசிரியர்கள்தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றியச்செயலாளர்கள் இக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
                            அன்புடன்...
                              கு.பாரதி,
     மாவட்டஅமைப்பாளர்.