வியாழன், 3 மே, 2018
புதன், 2 மே, 2018
ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(hra) மற்றும் நகர ஈட்டுப்படி(cca) சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை மற்றும் பரமத்தி ஒன்றியக்கிளைகளின் கூட்டுக்கூட்டம் (01.05.18) ~நிகழ்வுகள்..
மன்ற மறவர்களுக்கு வணக்கம்!
ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(hra) மற்றும் நகர ஈட்டுப்படி(cca) சார்ந்து
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை
மற்றும் பரமத்தி
ஒன்றியக்கிளைகளின் கூட்டுக்கூட்டம் 01.05.18 (செவ்வாய்) முற்பகல் 09.00மணிக்கு பரமத்தி ஊ.ஒ.தொ.பள்ளியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள் கலந்து கொண்டு HRA & CCA சார்ந்த தொடர் நடவடிக்கைகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வீட்டு வாடகைப்படி (HRA) நகர ஈட்டுப் படி (CCA) கபிலர்மலை, பரமத்தி ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி ,
மன்ற பொறுப்பாளர்கள் 04.05.2018 (வெள்ளி) அன்று கபிலர்மலை, பரமத்தி
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை சந்திப்பது எனவும், அதை தொடர்ந்து பரமத்தி சார்நிலை கருவூலர் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் அளிப்பது என முடிவாற்றப்பட்டது.
நன்றி.
மெ.சங்கர்
செவ்வாய், 1 மே, 2018
சேலம் மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(HRA) மற்றும் நகர ஈட்டுப்படி(CCA) சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, இராசிபும் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியக்கிளைகளின் கூட்டம்(1-5-18)~நிகழ்வுகள்...
இடம்:
நகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை,
இராசிபுரம்.
நாள்:
01.05.18(செவ்வாய்) பிற்பகல் 06.00மணி.
பரமத்தி மன்றம்~மே தின கொடியேற்றம் மற்றும் செயற்குழுக்கூட்டம் (1-5-18)~நிகழ்வுகள்...
Click here for photos...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)