வியாழன், 3 மே, 2018

பி.இ. கலந்தாய்வு: இன்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு...


பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை (மே 3)
முதல் ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் முதன் முறையாக அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கத் தெரியாத மாணவர்களுக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களை கலந்தாய்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.
இம்மையங்களில் கட்டணமின்றி இலவசமாக சேவையைப் பெற முடியும்.

ஜூலை முதல் வாரத்தில் ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (மே 3) தொடங்கப்பட உள்ளது. 

பி.இ. சேர்க்கை விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான இணையதள பக்கம்...

விமானப்பயணத்தில் செல்லிடப்பேசி, இணையதளம் பயன்படுத்தும் திட்டம்- தொலைத் தொடர்பு ஆணையம் ஒப்புதல்...

பரமத்தி மன்றம்~மே தின கொடியேற்றம் மற்றும் செயற்குழுக்கூட்டம் (1-5-18)~நாளிதழ் செய்திகளில்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ நாமக்கல் மாவட்ட மகளிரணி கூட்டம் (01-05-18)~நாளிதழ் செய்திகளில்....

புதன், 2 மே, 2018

அக்னி நட்சத்திரம் 4ம் தேதி ஆரம்பம் சேலம், நாமக்கல், தர்மபுரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்- 105 முதல் 107 பாரன்ஹீ ட் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ நாமக்கல் மாவட்ட மகளிரணி கூட்டம் (01-05-18)- இராசிபுரம் ~நிகழ்வுகள்...

ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(hra) மற்றும் நகர ஈட்டுப்படி(cca) சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை மற்றும் பரமத்தி ஒன்றியக்கிளைகளின் கூட்டுக்கூட்டம் (01.05.18) ~நிகழ்வுகள்..

மன்ற மறவர்களுக்கு வணக்கம்!

ஈரோடு  மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(hra) மற்றும் நகர ஈட்டுப்படி(cca) சார்ந்து
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை
மற்றும் பரமத்தி 
ஒன்றியக்கிளைகளின் கூட்டுக்கூட்டம்  01.05.18 (செவ்வாய்) முற்பகல் 09.00மணிக்கு பரமத்தி ஊ.ஒ.தொ.பள்ளியில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் அவர்கள் கலந்து கொண்டு HRA & CCA சார்ந்த தொடர் நடவடிக்கைகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வீட்டு வாடகைப்படி (HRA) நகர ஈட்டுப் படி (CCA) கபிலர்மலை, பரமத்தி ஆகிய  ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு  வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி , 
 மன்ற பொறுப்பாளர்கள்  04.05.2018 (வெள்ளி) அன்று கபிலர்மலை, பரமத்தி
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களை சந்திப்பது எனவும், அதை தொடர்ந்து  பரமத்தி சார்நிலை கருவூலர் அவர்களையும்  நேரில் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் அளிப்பது என முடிவாற்றப்பட்டது. 
                  நன்றி.
               மெ.சங்கர்

செவ்வாய், 1 மே, 2018

சேலம் மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டு வாடகைப்படி(HRA) மற்றும் நகர ஈட்டுப்படி(CCA) சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, இராசிபும் மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியக்கிளைகளின் கூட்டம்(1-5-18)~நிகழ்வுகள்...


இடம்: 
நகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை,
இராசிபுரம்.

நாள்:
01.05.18(செவ்வாய்) பிற்பகல் 06.00மணி.

நாமகிரிப்பேட்டை மன்றம்~மே தின கொடியேற்றம் மற்றும் செயற்குழுக்கூட்டம் (1-5-18)~நிகழ்வுகள்...