சனி, 5 மே, 2018
வெள்ளி, 4 மே, 2018
வியாழன், 3 மே, 2018
பி.இ. கலந்தாய்வு: இன்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு...
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை (மே 3)
முதல் ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கத் தெரியாத மாணவர்களுக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களை கலந்தாய்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.
இம்மையங்களில் கட்டணமின்றி இலவசமாக சேவையைப் பெற முடியும்.
ஜூலை முதல் வாரத்தில் ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (மே 3) தொடங்கப்பட உள்ளது.
பி.இ. சேர்க்கை விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான இணையதள பக்கம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)