ஞாயிறு, 20 மே, 2018

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான முகநூல் சார்ந்த பயிற்சி (Connecting Teachers Through FacebookMeting) ~CEO செயல்முறைகள்...

முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை...

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY ~Admission Notification (DDE) B.Ed Programme 2018-19…


Cost of Application- Rs.650

Last date for submission of filled in application is 14.06.2018.


Click here for more details...

சனி, 19 மே, 2018

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு...


மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.  www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்...


தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு www.tnau.ac.in/admission.html
 என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்ப கட்டணத்தை இணைய தள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம்.

இத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு... (18.05.2018)

கல்வியின் தரத்தை உறுதி செய்ய நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்...


கல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அரசாணை: 

தமிழகத்தில் உள்ள 37,112 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 சுயநிதிப்பள்ளிகள் ஆகியற்றை ஒழுங்குபடுத்தவும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐஎம்எஸ்), ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர் (ஐஏஎஸ்), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு நிகராக மாற்றம் செய்யப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சமமான கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். 

இதைத் தொடர்ந்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, நர்சரி பள்ளி, தனியார் பள்ளி என அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 

அதேபோன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்கள் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அலுவலர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட எந்தப் பள்ளியை வேண்டுமானாலும் ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படுகிறது. 

இதுவரை ஒழுங்கு நடவடிக்கை, நிர்வாக அதிகாரங்கள் மாநில அளவிலான இயக்குநர்கள், இணை இயக்குநர்களிடம் அதிகளவில் இருந்தது. இனி இந்த ஒழுங்கு நடவடிக்கை, நிர்வாக அதிகாரங்கள் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு இந்தப் பணியிடங்கள் தனித்தனியாக இருந்ததால் பள்ளிகளை ஆய்வு செய்தல், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது நிர்வாகச் சீரமைப்பு செய்யப்பட்டதன் மூலம் ஆய்வு, கண்காணிப்புப் பணிகள் மேலும் மேம்பட்டு கல்வியின் தரத்தை உறுதி செய்ய முடியும்.

புதிய அரசாணை 101-ன் படி CEO, DEO, BEO-ன் பணிகள்...


🌟அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க பதவிகள் ஒருங்கிணைபட்டு சில மாறுதல்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..

🌟மாவட்ட அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது...

பதவிகள்:

⚡1.முதன்மை கல்வி அலுவலர் CEO

⚡2.மாவட்ட கல்வி அலுவலர் DEO

⚡3.வட்டார கல்வி அலுவலர் BEO

1.முதன்மை கல்வி அலுவலர் பணிகள்:

🌟அனைத்து வகை பள்ளிகளையும் (அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளி,சுயநிதிப்பள்ளிகள்) கண்காணித்தல்..

🌟DEO BEO ஆகியோரை கண்காணித்தல்..

🌟அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆண்டாய்வு செய்தல்..

🌟பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்குதல்..

🌟அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட அளவில் கிடைப்பதை உறுதி செய்தல்...

🌟தனியார் பள்ளிகள் அங்கீகார பணிகளை மேற்கொள்ளுதல்...

2.மாவட்ட கல்வி அலுவலர் பணிகள்:

🌟அனைத்து வகை பள்ளிகளையும்  மேற்பார்வை செய்தல்

🌟BEO அலுவலர்கள் பணிகளை மேற்பார்வையிடுதல்..

🌟அனைத்து வகை உயர்நிலைப்  பள்ளிகளை ஆண்டாய்வு செய்தல்...

🌟மாவட்ட அளவில் அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் சென்றடைவதை உறுதி செய்தல்...

🌟உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்...

3.வட்டார கல்வி அலுவலர் பணிகள்:

🌟உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடம் வட்டார கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டு உள்ளது..

🌟அனைத்து வகை தொடக்க நடுநிலை பள்ளிகளை கண்காணித்து ஆண்டாய்வு செய்தல்..

🌟தொடக்கநிலை நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணிகளை கண்காணித்து அறிவுரைகளை வழங்குதல்..

🌟அரசு நலத்திட்ட உதவிகளை முறையாக கிடைப்பதை உறுதி செய்தல்..

இன்று 'டான்செட்' நுழைவு தேர்வு...


சென்னை: இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள் எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, இன்று(மே 19)தமிழகம் முழுவதும், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 913 பேரும், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, 15 ஆயிரத்து, 242 பேரும் பங்கேற்கின்றனர். எம்.சி.ஏ., படிப்புக்கு, நாளை தேர்வு நடக்கிறது. இதில், 5,240 பேர் பங்கேற்கின்றனர்.