செவ்வாய், 22 மே, 2018

வாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு அதிக அதிகாரம்...

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?


இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

இந்த வசதி தொழில் செய்யும் பல்வேறு மக்களுக்கு உதவியாய் இருக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மீடியா தகவல்கள் 30 நாட்களுக்கு வாட்ஸ்அப் ஆன்லைன் நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும்.

எனினும் இந்த தகவல்களை பயனர்கள் தங்கள் போனில் இருந்து நீக்கிவிட்டால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. ஆனால் தற்போது வந்துள்ள ரீடவுன்லோடு எனும் வசதியின் மூலம் 30 நாட்களுக்குள்ளாக இந்த தகவல்கள் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியின் புதிய ரீடவுன்லோடு அம்சம் பொறுத்தவரை 2.18.142 பதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பயனர்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் எளிமையா அப்டேட் செய்யமுடியும். இந்த ரீடவுன்லோடு அப்டேட் பொறுத்தவரை வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் உதவியாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

விரைவில் வாட்அப் செயலியில் புதிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிபா வைரஸ் ஒரு பார்வை...


கேரளாவில், நிபா வைரஸ் தாக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த நிபா வைரஸ் என்பது என்ன அது எப்படி பரவுகிறது என்றும் அதனை எப்படி தடுக்கலாம் என்றும் தற்போது பார்க்கலாம்.

புனேயில் உள்ள வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் மையம் கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையாக தாக்கும் வல்லமையை கொண்டது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு பத்து பேர் உயிரிழந்த நிலையில், மக்கள் அனைவருக்கும் முதற்கட்ட சோதனை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நிபா வைரஸ் தொடர்பாக தீவிர ஆய்வில் மத்திய அரசு சார்பாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பயப்பட வேண்டாம் எனவும் கேரள சுகாதாரதுறை செயலாளர் ராஜீவ் சதானந்தன் கூறியுள்ளார். மேலும் இதேபோன்று நிபா வைரஸ் காய்ச்சல் வங்கதேசத்திலும் பரவியதாகவும், அப்போது அதனை அந்நாட்டு அரசு லாவகமாக கையாண்டு, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றியதையும் ராஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார். 

விலங்ககளிலிருந்து பரவுகிறது: 

நிபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்களை கடுமையான தாக்கும் ஒரு நோய் கிருமி என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இது முதன் முதலில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் 1998-1999 ஆம் ஆண்டுகளில் பன்றிகளில் இருந்து மனிதர்களிடம் பரவியது. இதனைத்தொடர்ந்து ​​நிபா வைரஸின் தாக்குதலால் 265 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலியாவில் இந்த வைரஸ் குதிரையிலிருந்து மனிதர்களுக்கும், சில குறிப்பிட்ட வகை வௌவால்களிலிருந்தும் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபா வைரஸின் முக்கியமான அறிகுறிகள்: 

லேசான காய்ச்சலுடன் இந்த வைரஸ் பாதிக்கும். பிறகு, மூச்சுவிடுவதில் சிரமம், கடினமான தலைவலி , மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், கோமா, ஏற்பட்டு அது மூளைக் காய்ச்சலாக மாறும். இந்த வைரஸ் தாக்கினால், 75 சதவிகிதம் இறப்பு உறுதி எனக் கூறப்படுகிறது.தடுப்பு

மருந்துகள் கிடையாது: 

நிபா வைரசுக்கு என்று தனிப்பட்ட மருந்துகளோ தடுப்பூசிகளோ கிடையாது. ஆனால் இந்த வைரஸை தரமான நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பன்றிகளிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்றும், திறந்தவெளி  குடிநீரை குடிக்க கூடாது என்றும் மரத்தில் இருந்து கீழே விழும் பழங்களை உண்ண கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

DEPARTMENT EXAM MAY-2018 ~ HALL TICKETS…

திங்கள், 21 மே, 2018

அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி~அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

பிடித்தம் செய்த TDS தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம்...

பிடித்தம் செய்த TDS தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து  பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான  வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. 

இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு: 
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி. 

பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும்.  எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும். 

பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும். இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முக்கிய குறிப்பு: 

இந்த பணத்தை அந்தந்த டிடிஓ- க்கள் சம்பளம் வழியாக மட்டுமே பிடித்தம் செய்தல் வேண்டும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல்...


பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.

 பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. 
இதையடுத்து, மே 21ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவியர் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகள், தேர்வு மையங்களில் இன்று மதியம் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண்  ஆகியவற்றை பதிவு செய்து தாங்களே தங்களின் தற்காலிக மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு லஞ்சம்~ தமிழ்நாடு முதலிடம்,2-வது தெலங்கானா~ ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்…

அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க 87% பேர் ஒப்புதல்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்...