புதன், 30 மே, 2018

இனி பள்ளிப் பார்வைகள் கீழ்காணும் அடிப்படையில்தான் இருந்திடல் வேண்டும்...


அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு:

இந்தக் கல்வியாண்டு
(2018-2019) முதல்...
இனிவரும் காலங்களில் இந்த Whats Appல் இனி தங்களின் பள்ளிப் பார்வையின் பதிவேற்றம் பின்வருமாறு பதிவிட வேண்டும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவல் பின்வருமாறு :

1. ஒன்றியம் / பள்ளியின் பெயர்,

2. அப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை,

3. தங்கள் பார்வையிட்ட வகுப்பு, மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, 

4. தங்கள் பார்வையில் கண்ட பள்ளியின் நிறைகள் / குறைகள்,

5. கடந்த பள்ளி பார்வையில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டதா? அதன் விவரம்,

6. இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பெயர் மற்றும் காரணம்,

7. பள்ளியில் மாணவர்கள் இடையே தனித்திறமை இருப்பின் அந்த விவரம் மற்றும் புகைப்படம்,

மேற்கண்ட முறையில் மட்டுமே பதிவிட வேண்டும் என்று தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ள படுகிறது.

செவ்வாய், 29 மே, 2018

திருச்செங்கோட்டில் புதிய மாவட்ட கல்வி அலுவலகம்- திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவக்கம்...

HIGHER SECONDARY SECOND YEAR SPECIAL SUPPLEMENTARY EXAMINATIONS~ JUNE/JULY -2018...

அரசாணை எண் 108 பள்ளிக்கல்வி நாள்:28.05.2018 ~ 52 புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்தல் சார்பு…

வருமானவரி செலுத்தியது சார்ந்து சிறுவிளக்கம்...


 கடந்த சில வருடங்களாகவே ஆசிரியர்கள் கணிசமான அளவில் ஒரு தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.  அதுவும் மூத்த ஆசிரியர்கள் 50,000 முதல் 1,00,000 வரை இந்த ஆண்டு வருமான வரி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  இதற்கு ஏழாவது ஊதியக்குழு ஊதிய உயர்வும் ஒரு காரணம்.  எனவே, ஏப்ரல் மாதம் முதலே கணிசமான தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்தால் மட்டுமே ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிகப்படியான தொகையினை செலுத்த வேண்டிய நிலையிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.  ஆனால் ஏறத்தாழ அனைத்து ஆசிரியர்களுமே இதை கடைபிடிப்பதில்லை.  வெறும் 1000 அல்லது 2000 ரூபாய் மட்டுமே ஏழு எட்டு மாதங்கள் வரை பிடித்தம் செய்கின்றனர்.  கடைசி இரண்டு அல்லது மூன்று மாதங்களில் 20,000,   30,000 என்று பிடித்தம் செய்கின்றனர்.  இது தவறு.   கடைசி மாதமான பிப்ரவரி மாதத்தில் மட்டும் 35,000 ரூபாய் வரை பிடித்தம் செய்பவர்களும் உண்டு. இதற்கு காரணம் ஆண்டு துவக்கத்திலேயே நாம் செலுத்த வேண்டிய வருமான வரியை தோராயமாக கணக்கிடுவதில்லை.  மேலும் சென்ற ஆண்டு செலுத்திய வருமான வரியை விட இந்த ஆண்டு கண்டிப்பாக 25% வரை கூடும் என்பதே உண்மை.  மேலும் நாம் செலுத்த வேண்டிய வருமான வரி என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட் வாயிலாக முடிவு செய்யப்பட்டு விடுகிறது.  அடுத்த நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கீட்டில்  எந்த மாற்றமும் இல்லை என்னும் நிலையில் நாம் செலுத்த வேண்டிய வருமான வரி நிச்சயம் கூடுமே தவிர ஒரு ரூபாய் கூட குறையாது.  எனவே, ஆசிரியர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்தே ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகை அதாவது ரூ.10,000 வரை வருமான வரியாக பிடித்தம் செய்வதன் மூலமே கடைசி மாதங்களில் குறைவான தொகையே செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்படும். 

 அடுத்ததாக நம்மில் பலருக்கு ETDS என்பதற்கும் E Filing என்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை.  

E TDS என்றால் என்ன?  

நாம் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் வருமான வரியானது நேரடியாக நமது PAN எண்ணில் வரவு வைக்கப்படுவதில்லை.  நமக்கு  ஊதியம் பெற்றுத் தரும்  அலுவலரின் TAN எண்ணில்தான் வரவு வைக்கப்படும்.  உதாரணமாக ஓர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு இம்மாதம் வருமான வரியாக மொத்தம் ரூ.1,00,000 பிடித்தம் செய்திருந்தால் அத்தொகையானது அவருடைய TAN எண்ணில் வரவு வைக்கப்பட்டிருக்கும்.  மாறாக பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் PAN எண்ணில் வரவு வைக்கப்பட்டிருக்காது.  மொத்தமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.1,00,000 ஐ அந்தந்த ஆசிரியர்களின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு எந்தெந்த ஆசிரியரின் கணக்கில் எவ்வளவு தொகை வருமான வரியாக பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது என்னும் விபரத்தை Excel fileல் தயார் செய்து அங்கீகரிக்கப்பட்ட  ஓர் ஆடிட்டர் மூலம் இந்த விபரத்தை மத்திய அரசின் துறையான வருமான வரித்துறைக்கு அனுப்புதல் வேண்டும்.  அதன் பின் தான் தனித்தனியாக அந்தந்த ஆசிரியர்களின் PAN  எண்ணிற்கு உரிய தொகையானது வரவு வைக்கப்படும்.  இதுவே E TDS  எனப்படும்.  இந்த E TDS ஆனது ஊதியம் பெற்றுத் தரும் அலுலரால் செய்யப்பட வேண்டியது.  ஓர் ஆண்டில் மூன்று முறை இந்த E TDS விபரத்தை  அவர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  அதாவது முதல் காலண்டு – மார்ச், ஏப்ரல், மே ,ஜூன். இதற்கான கடைசி தேதி 31.07. ஆகும்.  இரண்டாம்  காலாண்டு ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர்.  இதற்கான கடைசி தேதி 31.10. ஆகும்.  மூன்றாம் காலாண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர். இதற்கான கடைசி தேதி 31.01. ஆகும்.  நான்காம் காலாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகும். இதற்கான கடைசி தேதி மே 31 ஆகும்.  இவ்வாறு இந்த விபரங்களை உரிய அலுவலர் உரிய தேதிக்குள் மத்திய அரசின் வருமான வரி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யாவிட்டால் கால தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.  இதுதான் E TDS ஆகும்.     

 E Filing என்பது தனி நபர்கள் தங்களது வருமான வரி கணக்கு விபரத்தினை மத்திய அரசுக்கு மத்திய அரசின் வருமான வரி இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் ஆகும்.  அவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டுமென்றால் ஏற்கனவே கூறிய E TDS செய்யப்பட்டிருக்க வேண்டும்.  நாம் செலுத்திய வருமான வரி முழுமையாக நமது PAN எண்ணில் வரவு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.   நமது PAN  எண்ணை login செய்து 26AS படிவத்தில் நாம் செலுத்திய வருமான வரித் தொகையினை சரிபார்த்துக்கொள்ளலாம்.  அதன் பின்னரே E Filing செய்ய வேண்டும் .  இந்த ஆண்டு முதல் வருமான வரி செலுத்திய அனைவருமே E Filing செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இதற்கான கடைசி நாள் ஜூலை 31ந் தேதி ஆகும்.  அதாவது 31.07.2018 கடைசி தேதி.  பொதுவாக அடுத்த மார்ச் 31ந் தேதி வரை காலக்கெடு தரப்படும்.  ஆனால் இந்த ஆண்டு முதல் ஜூலை 31 ஆக அது குறைக்கப்பட்டுவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...