வியாழன், 31 மே, 2018

NMMS Scholarship Amount increased from Rs.6000 to 12000 per annum effect from April 2017...

பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் எந்த தேதியில் என்ன உணவு வழங்க வேண்டும் என்ற அட்டவணை வெளியீடு...

தொடக்கநிலை வகுப்புகளுக்கு சீருடைமாற்றம்~கரும்பச்சை கால்சட்டை - இளம்பச்சை மேற்சட்டை அறிமுகம்...

திருச்செங்கோடு அரசு பள்ளியில் புதிய மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட தொடங்கியது~ 7ஒன்றியங்கள் இணைப்பு…

2018-2019ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து தமிழ்நாடு அரசின் அரசாணை...

பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை அறிவிப்புகள்~2018-19...

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...


சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல்பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை  திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

புதிய கற்றல் முறை படிநிலைகள்...