செவ்வாய், 5 ஜூன், 2018
திங்கள், 4 ஜூன், 2018
EMIS வலைதளம் முழுப்பயன்பாட்டில்...
EMIS இணையதளம் செயல்படத் தொடங்கி விட்டது.
முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புதியதாக உள்ளீடு செய்யவும் மற்ற வகுப்புகளுக்கு தங்கள் பள்ளியின் வருகைப்பதிவேட்டின் படி மாணவர்களை student pool பகுதிக்கு மாற்றவும் வேறு பள்ளியிலிருந்து வந்த மாணவர்களை student pool பகுதியிலிருந்தும் ஈர்த்துக் கொள்ளும் வசதி உள்ளது.
மாணவர்களின் விவரங்களில் பிழை இருப்பின் மாற்றம் செய்து கொள்ளவும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் Biometric Attendance ...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தப்படுகிறது.
முதல் சுற்றில் ஆசிரியர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் களைந்த பின்னர் 2ஆம் பருவம் முதல் அதே மெஷினில் EMIS எண்ணை இணைத்து மாணவர்களுக்கும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே செவிலியர்களுக்கு இம்முறையிலான வருகைப் பதிவு முறை பின்பற்றப்படுகிறது.
ஆசிரியர்கள் வருகைப் பதிவை காலை, மாலை என இரு வேளையும் biometric முறையில் விரல் ரேகைப் பதிவிட வேண்டும்.
இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அனைவரின் வருகைப்பதிவும் கண்காணிக்கப் படும்.
Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும்.
அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசியமில்லை.
மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்துமே மாற்றி அமைக்கப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)