வியாழன், 7 ஜூன், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை)~ ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம்[06/06/18]~நிகழ்வுகள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், 
நாமக்கல் மாவட்டம் (கிளை).

ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம்...

இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி, இராசிபுரம்.

நாள் : 06/06/18 ( புதன்) மாலை 06 மணி.

புதன், 6 ஜூன், 2018

ஜூலையில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்...

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் சார்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.59 லட்சத்து, 631 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இவர்களில், 59 ஆயிரத்து, 416 பேர் மாணவியர். கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியல் தயார் செய்வதற்கான, 'ரேண்டம்' எண் பட்டியலை
உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், முதன்மை செயலர், சுனில் பாலிவால் ஆகியோர்,   வெளியிட்டனர்.

பின்னர், அமைச்சர் அளித்த பேட்டி: 

மாணவர்களின் தரவரிசை பட்டியலை நிர்ணயிக்கும் போது, ஒரே மதிப்பெண் உள்ள மாணவர்களை வரிசைப்படுத்துவதற்கு, ரேண்டம் எண் உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங் முறையில், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வதன் வழியாக, மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்படும்.

இதற்கான கவுன்சிலிங்கை, ஜூலை, 6ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவ கவுன்சிலிங் தேதிக்கு ஏற்ப, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி மாறுபடும்.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 18 ஆயிரத்து, 500 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஜூன், 8 முதல், 14 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை...


தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக்பொருட்களுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வர்  இந்த அறிவிப்பிணை
வெளியிட்டார்.

அதில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடும் மாசுபாடு ஏற்படுவதால், தமிழகத்தில் 2019ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஷ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் மற்றும் தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டின் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986ன் கீழ் தடை செய்ய அரசு முடிவு செய்து, தமிழ்நாடு முழுவதும் இந்த பொருட்களை தடை செய்கிறது, என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொது மக்களும், வியாபாரிகளும் மேற்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு மற்றாக, துணிப் பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தபழகிக் கொள்ள ஏதுவாக, மேற்படி தடைகளை உடனடியாக அமல்படுத்தாமல் 2019 ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பிஎப் ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே உயிர்ச்சான்று பெற வசதி...

மாற்றுத்திறனாளி உதவித்தொகை சார்ந்த அரசாணை...

செவ்வாய், 5 ஜூன், 2018

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் 11ம் தேதி முதல் வினியோகம்...

EMIS - வலைதளத்தில் இந்த வேலைகளை செய்து விட்டீர்களா?


EMIS இணையதளம் செயல்படத் தொடங்கி விட்டது... 5,8 வகுப்பு மாணவர்கள் ஏனைய
வகுப்புகளில் இருந்து பள்ளியை விட்டு விலகிய மாணவர்களை பொது தொகுதிக்கு மாற்றம் செய்யவும்...

தங்கள் பள்ளியில் தற்போது 2ஆம் வகுப்பு முதல் 5 / 8 வரை உள்ள மாணவர்களை வகுப்பு மாற்றம் செய்யவும்...

தற்போது தங்களின் பள்ளிக் கண்ணாடியில் உள்ளவாறு மாணவர்கள் எண்ணிக்கை EMIS ல் சரியாக இருக்க வேண்டும்.

தமிழ்வழி ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என EMISல் திருத்தம் செய்யப்பட வேண்டும்..

மாணவர்களின் பெயர் திருத்தம் செய்யலாம்.

தங்கள் பள்ளிக்கு புதிதாக சேர்ந்துள்ள மாணவனை பொது தொகுதியில் இருந்து ஈர்த்துக் கொள்ளலாம்..

புதிய முதல் வகுப்பு  மாணவர்களை பதிவேற்றம் செய்ய புகைப்படம் ஆதார் எண்ணுடன் தயார்நிலையில் வைத்திருக்கவும்..(பதிவேற்றம் செய்ய வழிவகை உள்ளது)

EMIS NEWS:புதிய கல்வியாண்டில் ஜுன் 2018 வருகை பதிவேட்டின் படி மொத்த மாணவர்களின் விவரங்களை வகுப்புவாரியாக. இணையதளத்தில் உள்ளீடு செய்தல் மற்றும் சரிபார்த்தல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

அரசாணை 408, நாள் 30/5/2018 ன் படி மாவட்ட வாரியாக தொடக்கக்கல்வித் துறையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்...

டி.என்.பி.எஸ்.சி .குரூப்1 வயது வரம்பு அதிகரிப்பு...