ஞாயிறு, 17 ஜூன், 2018
வெள்ளி, 15 ஜூன், 2018
தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை~ ஜூன் 18 முதல் விண்ணப்பிக்கலாம்...
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜுன் 18 -ஆம் தேதி முதல் (திங்கள்கிழமை) விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் 2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் ஜூன் 18 -ஆம் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30 -ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளம் மூலம் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்துவதற்கு தங்களது பற்று அட்டை(Debit Card),, கடன் அட்டை (Credit Card), இணைய வங்கிச் சேவை (Internet Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி செலுத்தலாம்.
கட்டணம் எவ்வளவு?: பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ.500, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
அவர் அளிக்கும் விவரங்கள் அனைத்தும் கலந்தாய்வின்போது சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும்.
விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய விளக்கங்கள், தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்ந்த தகவல்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை www.tnscert.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்...
'வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தற்போது வேலூா மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்27 சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள்மூலமாக 190 மையங்களும், மகளிர் திட்டம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.சில நாட்களாக இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவு செய்திட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனா.
இதனால், சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது அரசு கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு இ-சேவைஇணையதளத்தில் ஓபன் போர்டல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த போர்டல் மூலம் பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே கணினி, மடிக்கணினி மூலம் பதிவு செய்திடலாம். இந்த பதிவுக்கு சான்றிதழுக்கு ரூ.67 பதிவுக் கட்டணமாக இணையவங்கி மூலம் பணப்பரிவாத்தனை செய்திட வேண்டும்.
கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய HRA & CCA வழங்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கபிலர்மலை ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி.ஆசிரியர் மன்றம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொடர் நடவடிக்கைகள் கடிதம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)