ஞாயிறு, 24 ஜூன், 2018

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செல்போன் மூலமாகவே எளிமையாக இணைக்கலாம்!


இன்டர்நெட் வசதி இல்லாமலேயே, குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாக பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை வருமான வரித் துறை ஏற்படுத்தி வைத்துள்ளது.

 வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது. 

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் வருமான வரித் துறை செய்து கொடுத்தது.
அதன்படி, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கென பிரத்யேக இணைப்பை வருமான வரித் துறை உருவாக்கியது.
அந்த இணைப்பில் வருமான வரி செலுத்துவோர் சென்று, தங்கள் பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டாலே போதுமானது. சிறிது நேரத்தில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டது உறுதி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை ஆகியவற்றில் உள்ள சிறிய பெயர் மாற்றங்களும் இதில் தாமாக சரிசெய்யப்பட்டு விடும்.
Link:

குறுஞ்செய்தி வசதி: 

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான வசதியை மேலும் எளிமையாக்கும் விதமாக, குறுஞ்செய்தி வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, செல்லிடப்பேசியில்UIDPAN என்று டைப் செய்து இடைவேளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவேளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும். இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்.
பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியான பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்தக் குறுஞ்செய்தி வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணைஇணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு...


 பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் மேல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உங்களது ஐடிஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்து விடலாம். இல்லை என்றால் மிகவும் கஷ்டம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறகு இது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஜூன் 30ம் தேதிக்குள் நிச்சயமாக இணைத்து விடுங்கள். இதன் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாது.

இவ்விரண்டு எண்களையும் இணைக்காமல் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இயலாது. மத்திய நேரடி வரி வருவாய்த் துறையின் அறிக்கை இதனை தெளிவுபடுத்துகிறது. எனவே அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். அப்போதுதான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சனி, 23 ஜூன், 2018

கீழ்கண்டவற்றை செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்...


ஆசிரியர்களின் கவனத்திற்கு...

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக   Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager
போன்ற Android அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே 
முன்னச்செரிக்கையாக 
phone ல் செய்ய வேண்டியது...

1) play store  சென்று settings ல் parent control option ஐ on செய்யவும்.

2) அதன் கீழே உள்ள Apps and Games ஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும்.

3) அடுத்ததாக  Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Video க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும்.

4)அதேபோல் YouTube settings ல் Restriction  mode ஐ on செய்யவும்,

இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்...

தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மையம்~ பிரகாஷ் ஜவடேகர் பேட்டி…

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்...

வெள்ளி, 22 ஜூன், 2018

அஞ்சல் துறை ~ தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ஊக்கத்தொகை திட்டம் ~ 6 - 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

தொடக்கக்கல்வி : 2017-18 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைவு என கண்டறியப்பட்ட பள்ளிகளில் 2018 - 19ஆம் கல்வி ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கைக்குப் பின் உள்ள மாணவர் எண்ணிக்கை விவரத்தை வாரந்தோறும் தெரிவித்தல் சார்ந்து...

இரட்டை குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் மகப்பேறு விடுப்பு பற்றிய திருத்தப்பட்ட அரசாணை~ Granting of maternity leave for one more delivery to a woman Government servant who gave birth twins in a delivery…

பள்ளிக் கல்வி - புதிய பாடநூல்கள் - 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்கள்- கருத்தாளர்களுக்கானப் பயிற்சி - சார்ந்து...

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6- மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு)இடைநிலைத் தேர்வெழுதும் மாணவர்களுக்கும் , பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் , வினைாத்தாள் குறித்த தெளிவுரை வழங்குதல்-சார்ந்து...