Click here...
ஞாயிறு, 1 ஜூலை, 2018
பாஸ்போர்ட்டுக்கு புது ‘App’...
இந்தியாவின் எந்த பகுதியில் வசிக்கும் நபரும், மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய, 'மொபைல் ஆப்'பை, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிமுகம் செய்தார்.
இதில், கம்ப்யூட்டர், பிரிண்டர் இன்றி, மொபைல் போன் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதுடன், அதற்கான கட்டணம் செலுத்தி, நேர்காணலுக்கான நேரம், தேதியை பெறும் வசதியும் உள்ளது.
இதனால், புதிய, 'மொபைல் ஆப்'பிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வகையிலான பாஸ்போர்ட்டிற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில், 10 லட்சம் பேர் அந்த 'ஆப்'பை பதிவிறக்கம் செய்துள்ளதாக, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2018 ஜூலை மாதம் பள்ளி நாள்காட்டி...
* BEO அலுவலக குறைதீர் நாள் : 07.07.18
* சனிக்கிழமை வேலை நாள்கள்: 21.07.18 & 28.07.18
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்:
(முதல்வகுப்பு)
*1 batch: 13&14.07.18
*2 batch: 16&17.07.18
*3 batch: 18&19.07.18
*4 batch: 20&21.07.18
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிவகுப்புகள்: (VI std)
Maths&social :
*1 batch: 9&10.07.18
*2 batch : 11&12.07.18
Tamil& Science:
*1 batch : 13&14.07.18
*2 batch: 16&17.07.18
English :
*1 batch:18&19.07.18
*2 batch: 20&21.07.18
* மதவிடுப்பு இல்லை
* அரசு விடுமுறை இல்லை
* குறுவளமையப்பயிற்சி வகுப்பு இல்லை
* கல்வி வளர்ச்சி நாள் : 15.07.18
*ஜூலை மாத வேலை நாள்கள் : 24
*31.07.18 - முடிய பள்ளி மொத்த
வேலை நாள்கள் :45
Whatsapp~இனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்…
வாட்ஸ்அப் அப்டேட்
தற்போது, வாட்ஸ்அப்பில் புதிதாக ஒரு வசதி பீட்டா வெர்ஷன் மூலம் பயனர்களால் சோதனைசெய்யப்பட்டுவருகிறது. இதற்கு முன், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். ஆனால், இனி அந்தக் குழுவின் அட்மின் நினைத்தால் மட்டுமே அனைத்து நபர்களும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் ஃபீட்டா ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.18.201 மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன் 2.18.70 இவ்விரண்டு ஃபீட்டா வெர்ஷன்களிலும் இந்தப் புதிய வசதி சோதனையில் உள்ளது.
இதன்படி, வாட்ஸ்அப்பின் குரூப் செட்டிங்ஸில் sent messages என்ற ஆப்ஷன் இருக்கும். அதைக் க்ளிக் செய்தால், All participants அல்லது only admin என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். only admin என குரூப் செட்டிங்கை மாற்றினால், குழுவில் உள்ள அட்மின்கள் மட்டுமே அந்தக் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும். All participants ல் குரூப் செட்டிங்கை மாற்றினால், அனைவரும் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். இந்த வசதி விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நபர்களை மட்டும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியாதபடி ப்ளாக் செய்யும் வசதியும் இனி எதிர்காலத்தில் வரலாம் எனவும் கூறப்படுகிறது.
சனி, 30 ஜூன், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)