வியாழன், 19 ஜூலை, 2018
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படும் ~ கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்…
1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாட புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு புதிய பாடப் புத்தகங்கள் அமலுக்கு வர உள்ளன.
இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் தி்ட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை புதிய தகவல்கள் அனைத்தும் பாடத்திட்டங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித் துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளை முறையாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க தனி குழு அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு அமலான பாட புத்தகங்களில் உள்ள சிறிய குறைகள், புதிய பதிப்பில் சரி செய்யப்படும் எனவும் உதய சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதன், 18 ஜூலை, 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)