வியாழன், 26 ஜூலை, 2018

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு...


அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ,தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது

பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது

இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார்

 இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு

1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 18

9 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18

தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2

 டிச.23 - ஜன.1

 ஏப்., 19 - ஜூன் 2

//தகவல்பகிர்வு:ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்டம்//

மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்...

பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை!


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை
உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. 

ஆசிரியர்,
அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும்.

ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

//தகவல் பகிர்வு:ஆசிரியர்மன்றம் - நாமக்கல் மாவட்டம்//

வருமான வரிச்சட்டத்தகவல்கள்...

புதன், 25 ஜூலை, 2018

வல்வில்ஓரி விழாவையொட்டி ஆக3ம் தேதி உள்ளூர் விடுமுறை...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு இனிமேல் இரண்டு தேர்வுகள் எழுதவேண்டும்...

நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ~பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-EMIS-பள்ளியில்பயிலும் அனைத்துமாணக்கர் விவரங்களையும் EMISல் பதிவுசெய்து சான்று அனுப்பக் கோருதல்-சார்பு.

பள்ளிகளில் மன்றங்கள் ~ அறிமுக கையேடு...

மாணவர் கையேடு~ 2018-19

ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிரடி...


ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி 2 தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல் போட்டி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.