வியாழன், 26 ஜூலை, 2018
பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை!
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை
உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது.
ஆசிரியர்,
அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும்.
ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
//தகவல் பகிர்வு:ஆசிரியர்மன்றம் - நாமக்கல் மாவட்டம்//
புதன், 25 ஜூலை, 2018
ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள் - தமிழக அரசு அதிரடி...
ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் போட்டித்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இனி 2 தேர்வுகள் நடத்தப்படும். அதேபோல் போட்டி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)