திங்கள், 30 ஜூலை, 2018

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...


மத்திய அரசின் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக்கட்டணம் ரூ100 செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வு எழுத  விரும்புவோர் www.vvm.org.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

சாலை விபத்து~விழிப்புணர்வு...

"சுட்டி தமிழ்"~ தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் படங்களுடனும், உச்சரிப்புடனும் மாணவர்களுக்கு கற்பிக்க உதவும் செயலி...

வீட்டில் இருந்தபடியே கணினி வாயிலாக 20 சான்றிதழ் பெறும் வசதி...

ஞாயிறு, 29 ஜூலை, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ கபிலர்மலை ஒன்றியம் (கிளை)~ ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/07/18)~நாளிதழ் செய்திகளில்...




பாடநூலில் உள்ள விரைவுக்குறியீடுகள் (QR Code)...

WhatsApp News...

வாட்ஸ் அப்பில்  நீங்கள் டைப் செய்யும் இடத்தில் V*@ என அழுத்தினால் குழுவில் உள்ள அனைவரின் பெயரும் வரும்...(குரூப்பில் மட்டுமே)
 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்க மறறும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் -Tab களில் customize செய்யப்பட்டுள்ள APPகளை பயன்படுத்துவதற்கான பயிற்சி நாட்களை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றுதல் - சார்பு...