வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
வியாழன், 16 ஆகஸ்ட், 2018
EMIS website ல் teacher details பதிவேற்றம் செய்வது எப்படி?
Step - 1:
EMIS teacher details பதிவேற்றம்
செய்யும் போது staff details option செல்லவும்.
Step-2:
select செய்யவும்.
நம்முடைய பெயரின் மீது கிளிக் செய்யவும்.
Edit option click செய்யவும்.
Enable/ disable option click செய்யவும். விவரங்களை பதிவு செய்யவும்.
Step-3:ல் பதிவு செய்ய வேண்டாம்.
நம் பள்ளிக்கு புதிதாகவோ, மாற்றலாகியோ வந்திருந்தால் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே பெயர் உள்ளவர்கள் பதிவு செய்தால் இன்னொரு முறை நம் பள்ளியின் கணக்கில் இரண்டு முறை நம் பெயர் காட்டும்.
பள்ளி இடை நின்றவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர அரசு முயற்சி~ மனிதவளத்துறை அமைச்சர் தகவல்…
வறுமை காரணமாக ஏதேனும் பணிக்குச் செல்ல நிர்பந்திக்கப்படும் பள்ளி இடை நின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள்கல்வியைத் தொடர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் சனிக்கிழமை விவேகானந்தா கல்விச் சங்கம் சார்பாக நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டஅமைச்சர் பேசியதாவது:
"எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு மாணவர் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் பணிக்குச் செல்ல நிர்பந்திக்கப்படலாம். அப்படியான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் தங்கள் கல்வியை மீண்டும் தொடர்வதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் ஒரு மாணவர் முனைவர் பட்டம் வரைக்கும் படிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதுதொடர்பான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.
மேலும், பள்ளி மாணவர் களுக்காக 'இஷான் விகாஸ்' என்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில்9 மற்றும் 11ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் பின்னாளில் ஆய்வாளர்களாகவோ, விஞ்ஞானி களாகவோ ஆவதற்குஆர்வம் காட்டும் சிலரைத் தேர்வு செய்து அவர்களை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நாட்டில் உள்ள உயர்ந்த கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.ஆண்டுக்கு இரண்டு முறை நிகழும் இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு முறையும் சுமார் 2200 மாணவர்கள் கலந்து கொள்வார்கள்
என்று கூறினார்.
தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடக்கம்...
அங்கன்வாடி பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை மாதிரி பள்ளிகளில் மட்டுமே LKG,UKG வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக 32 அரசு பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி, யு.கே.ஜி., துவக்கம்.
அடுத்த கல்வி ஆண்டில் 35, 000 அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)