ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
சனி, 18 ஆகஸ்ட், 2018
விண்டோஸ் 10 ஆட்டோமெட்டிக் அப்டேட்டுக்களை நிறுத்துவது எப்படி?
விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள அப்டேட்டுக்கள் தானாகவே அப்டேட் ஆகிவிடும் என்பது தெரியும். நமது கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 தானாகவே அனைத்தையும் அப்டேட் செய்டுவிடுவதால் நம்முடைய வேலை சுலபமாகும். ஆனால் அதே நேரத்தில் அன்லிமிடெட் டேட்டா வைத்திருப்பவர்களுக்கு இந்த தானாக அப்டேட் விஷயம் ஒரு வரம்தான். ஆனால் குறைந்த அளவு டேட்டாக்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் ஒரு சிக்கலான விஷயம். எனவே ஒருசில முக்கிய அப்டேட்டுகளை தவிர தானாக விண்டோஸ் 10 அப்டேட் செய்வதை கட்டுப்படுத்தலாம்.
குருப் பாலிசி எடிட்டர் மற்றும் ரிஜிஸ்டரி ஆகியவற்றின் மூலம் உங்கள் விண்டோஸ் ஓஎஸ் தானாகவே அப்டேட் செய்வதை கட்டுப்படுத்தலாம். இதனால் தானாகவே டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆகும் அப்டேட்டுகளை நமக்கு தேவைபடும்போது மட்டும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் தானாக அப்டேட் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் உணரலாம்.
விண்டோஸ் 10 ஓஎஸ் -இல் லோக்கல் குரூப் பாலிசி எடிட்டரில் ஒருசில மாற்றங்களை செய்து இதனை செய்யலாம். இந்த ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் தானாக அப்டேட் செய்யப்படுவது நிறுத்தப்படும்
குரூப் பாலிசி எடிட்டர் முறைப்படி இதனை எப்படி செய்வது என்பதை தற்போது பார்ப்போம்...
1. விண்டோஸ் கீ மற்றும் ஆர் ஆகியவற்றை பயன்படுத்தி முதலில் ரன் கமாண்ட் செல்லுங்கள்
2. பின்னர் அதில் gpedit.msc என்று டைப் செய்து லோக்கல் குரூப் பாலிசி எடிட்டருக்கு செல்ல வேண்டும்
3. அதன்பின்னர் Computer Configuration-Administrative Templates-Windows Components- Windows Update என்று சரியாக செல்ல வேண்டும்
4. வலதுபுறத்தில் உள்ள ஆட்டோமெட்டிக் அப்டேட் பாலிசி சென்று அதனை டபுள் க்ளிக் செய்ய வேண்டும்
5. அதன் பின்னர் இடது புறத்தில் உள்ள எனேபிள் ஆப்சனை க்ளிக் செய்து இதனை எனேபிள் செய்ய வேண்டும்
6. இப்போது நீங்கள் ஆட்டோமெட்டிக் அப்டேட்ஸ் குறித்த சில ஆப்சன்களை பார்க்கலாம். அதில் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆப்சன், ஆட்டோ டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால், ஆட்டோ டவுன்லோடு மற்றும் ஷெட்யூல் இன்ஸ்டால் மற்றும் லோக்கல் அட்மின் செட்டிங் என்ற நான்கு ஆப்சன்கள் இருக்கும்.
இதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும். நான்காவது ஆப்சனை தேர்வு செய்தால் நீங்கள் சரியாக எப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். மேலும் உங்களுக்கு தேவை என்றால் ஆட்டோ இன்ஸ்டாலையும் தேர்வு செய்யலாம். அதேபோல் ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தையும் நீங்கள் தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
7. அதன்பின்னர் அப்ளை என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்
8. அதன் பின்னர் கடைசியில் ஓகே பட்டனை கிளிக் செய்து இந்த வேலையை நீங்கள் முடித்து கொள்ளலாம்.
இவற்றில் குறைவான டேட்டா வைத்திருப்பவர்களுக்கான சிறந்த ஆப்சன் என்றால் இரண்டாவது ஆப்சன் தான். இதனை தேர்வு செய்வதன் மூலம் தானாகவே அப்டேட் ஆகாது. புதிய அப்டேட்டுக்கள் இருக்கும்போது உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வரும். ஆனால் நீங்கள் அப்டேட் செய்து கொள்வதும், செய்து கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்தான். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிறு வேலை இதுதான்
1. செட்டிங்கை ஓப்பன் செய்யுங்கள்
2. அப்டேட் மற்றும் செக்யூரிட்டியை டேப் செய்யவும்
3. விண்டோஸ் அப்டேட் ஆப்சனை தேர்வு செய்யவும்
4. டவுன்லோடு பட்டனை டேப் செய்யவும்
5. ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து இந்த வேலையை முடிக்கவும்.
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018
CPS ACCOUNT SLIP~2017-18 ஐ பதிவிறக்கம் செய்யும் முறை...
📱CPS: Account Slip 2017-2018 ஐ பெற கீழே உள்ள Link ஐ Click செய்யவும்...👇
📱தங்களது CPS எண் மற்றும் பிறந்த தேதியை(EX:18/06/1953 வடிவில்) பதிவிட்டு Login செய்யவவும்...
📱Account Statement ஐ Click செய்யவும்...
📱Select the year ல் 2017-18ஐ Select செய்து Submit கொடுக்கவும்...
📱Download ஐ Click செய்து Account Statement ஐ காணலாம்...
📱இறுதியில் Logout செய்துவிடவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)