திங்கள், 20 ஆகஸ்ட், 2018

கேரளாவின் வெள்ள மீட்பு பணிக்கு இஸ்ரோவின் 5 செயற்கைக்கோள் உதவி...

அனைவருக்கும் பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்


மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தேர்வில்  பெயில் செய்ய முடியாது. ஆனால், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மேல்நிலை கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும் இந்த ஷரத்தை நீக்க  தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் மாணவர்களை பெயில் ஆக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்வில்  தோல்வியடையும் மாணவன் 2 மாத பயிற்சி பெற்று உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இச்சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை எக்காரணம் கொண்டும் மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என கல்வி  பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது:

5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை பெயில் ஆக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்திருத்தம் உள்ளது. இதை, தமிழக அரசு  ஏற்கக்கூடாது. இது பள்ளி மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுத்துவிடும்.

தற்போது 5 மற்றும் 8ம் வகுப்புகளின் இறுதியில் தேர்வுகள் நடத்தி  மாணவரது கற்றல் திறனை காண வழி செய்யும் கல்வி உரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாணவர் தேர்ச்சி  பெற தவறினால் இரண்டு மாத தனிப்பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும், இதன்மூலம் மாணவர்களை தக்கவைப்பது பற்றி முடிவு  செய்யலாம் என்றும் மசோதா கூறுகிறது.

 இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால்,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மற்றும் சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள்  அதிகளவில் பாதிக்கப்படுவார்கள். கற்றல் குறையுடைய மாணவர்களை கண்டறிந்து தக்க பயிற்சி கொடுத்து தேர்ச்சி பெற வைப்பது ஆசிரியர்களின்  கடமை.

இதற்காக மாணவர்களை தோல்வியடைய செய்து தண்டிப்பது தவறான அணுகுமுறை ஆகும். எனவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி,  தமிழக அரசு இந்த சட்டத்திருத்தத்தை ஏற்கக்கூடாது.
இவ்வாறு நடராஜ் கூறினார்.

சனி, 18 ஆகஸ்ட், 2018

EMIS -CLASS & CASTE WISE ABSTRACT FORMAT...

விண்டோஸ் 10 ஆட்டோமெட்டிக் அப்டேட்டுக்களை நிறுத்துவது எப்படி?


விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள அப்டேட்டுக்கள் தானாகவே அப்டேட் ஆகிவிடும் என்பது தெரியும். நமது கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 தானாகவே அனைத்தையும் அப்டேட் செய்டுவிடுவதால் நம்முடைய வேலை சுலபமாகும். ஆனால் அதே நேரத்தில் அன்லிமிடெட் டேட்டா வைத்திருப்பவர்களுக்கு இந்த தானாக அப்டேட் விஷயம் ஒரு வரம்தான். ஆனால் குறைந்த அளவு டேட்டாக்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் ஒரு சிக்கலான விஷயம். எனவே ஒருசில முக்கிய அப்டேட்டுகளை தவிர தானாக விண்டோஸ் 10 அப்டேட் செய்வதை கட்டுப்படுத்தலாம்.

குருப் பாலிசி எடிட்டர் மற்றும் ரிஜிஸ்டரி ஆகியவற்றின் மூலம் உங்கள் விண்டோஸ் ஓஎஸ் தானாகவே அப்டேட் செய்வதை கட்டுப்படுத்தலாம். இதனால் தானாகவே டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆகும் அப்டேட்டுகளை நமக்கு தேவைபடும்போது மட்டும் அப்டேட் செய்து கொள்ளலாம். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் தானாக அப்டேட் செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் உணரலாம். 

விண்டோஸ் 10 ஓஎஸ் -இல் லோக்கல் குரூப் பாலிசி எடிட்டரில் ஒருசில மாற்றங்களை செய்து இதனை செய்யலாம். இந்த ஸ்டெப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் தானாக அப்டேட் செய்யப்படுவது நிறுத்தப்படும்

குரூப் பாலிசி எடிட்டர் முறைப்படி இதனை எப்படி செய்வது என்பதை தற்போது பார்ப்போம்...

1. விண்டோஸ் கீ மற்றும் ஆர் ஆகியவற்றை பயன்படுத்தி முதலில் ரன் கமாண்ட் செல்லுங்கள்

2. பின்னர் அதில் gpedit.msc என்று டைப் செய்து லோக்கல் குரூப் பாலிசி எடிட்டருக்கு செல்ல வேண்டும்

3. அதன்பின்னர் Computer Configuration-Administrative Templates-Windows Components- Windows Update என்று சரியாக செல்ல வேண்டும்

4. வலதுபுறத்தில் உள்ள ஆட்டோமெட்டிக் அப்டேட் பாலிசி சென்று அதனை டபுள் க்ளிக் செய்ய வேண்டும்

5. அதன் பின்னர் இடது புறத்தில் உள்ள எனேபிள் ஆப்சனை க்ளிக் செய்து இதனை எனேபிள் செய்ய வேண்டும்

6. இப்போது நீங்கள் ஆட்டோமெட்டிக் அப்டேட்ஸ் குறித்த சில ஆப்சன்களை பார்க்கலாம். அதில் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் ஆப்சன், ஆட்டோ டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால், ஆட்டோ டவுன்லோடு மற்றும் ஷெட்யூல் இன்ஸ்டால் மற்றும் லோக்கல் அட்மின் செட்டிங் என்ற நான்கு ஆப்சன்கள் இருக்கும்.

இதில் உங்களுக்கு தேவையான ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும். நான்காவது ஆப்சனை தேர்வு செய்தால் நீங்கள் சரியாக எப்போது அப்டேட் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். மேலும் உங்களுக்கு தேவை என்றால் ஆட்டோ இன்ஸ்டாலையும் தேர்வு செய்யலாம். அதேபோல் ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தையும் நீங்கள் தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

7. அதன்பின்னர் அப்ளை என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்

8. அதன் பின்னர் கடைசியில் ஓகே பட்டனை கிளிக் செய்து இந்த வேலையை நீங்கள் முடித்து கொள்ளலாம்.

இவற்றில் குறைவான டேட்டா வைத்திருப்பவர்களுக்கான சிறந்த ஆப்சன் என்றால் இரண்டாவது ஆப்சன் தான். இதனை தேர்வு செய்வதன் மூலம்  தானாகவே அப்டேட் ஆகாது. புதிய அப்டேட்டுக்கள் இருக்கும்போது உங்களுக்கு ஒரு நோட்டிபிகேசன் வரும். ஆனால் நீங்கள் அப்டேட் செய்து கொள்வதும், செய்து கொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்தான். இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரு சிறு வேலை இதுதான்

1. செட்டிங்கை ஓப்பன் செய்யுங்கள்

2. அப்டேட் மற்றும் செக்யூரிட்டியை டேப் செய்யவும்

3. விண்டோஸ் அப்டேட் ஆப்சனை தேர்வு செய்யவும்

4. டவுன்லோடு பட்டனை டேப் செய்யவும்

5. ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து இந்த வேலையை முடிக்கவும்.

EMIS-STAFF REGISTRATION FORM...

EMIS: SUB CASTES LIST (PDF)...

1 ,6 ,9 மற்றும் 11 ஆம் வகுப்பு- புதிய பாடத்திட்ட பயிற்சி- உயர்திரு டி. உதயச்சந்திரன் இ. ஆ.ப. பாடத்திட்ட செயலர் தலைமையில் முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் கருத்தாளர்கள்- கலந்துரையாடல்- CEO செயல்முறைகள்...

குருப் 2ஏ பதவிக்கு 27ம்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தொடக்கம்~TNPSC அறிவிப்பு...