ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு (09.09.18-ஞாயிறு)முற்பகல் 08.00மணிக்கு இராசீபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமினை சேவை அமைப்புகளுடன் இணைந்து நடத்துகிறது...

வேண்டுகோள்:
அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு  (09.09.18-ஞாயிறு)முற்பகல் 08.00மணிக்கு  இராசீபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்
பள்ளியில் 
இலவச கண் சிகிச்சை முகாமினை சேவை அமைப்புகளுடன் இணைந்து  நடத்துகிறது .

அறிவொளி மட்டுமல்ல கண்ணொளியும் பெறுவதற்கு ஆசிரியர்மன்றம் சமூக அக்கறையுடன்  பணியாற்றுகிறது;
சமூகநலனுக்கு பங்களிப்பு செய்கிறது. 

ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களே!
ஆசிரியச்சகோதர -சகோதரிகளே!
கண்சிகிச்சை முகாமை வெற்றிபெறச்செய்யுங்கள்!
கண்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவுங்கள்!
 ஒவ்வொருவரும் தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும்  தயக்கமின்றி முகாம் மருத்துவர்களுடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்!
மேலதிகமான விபரங்களை
அறிந்து கொள்ளுங்கள்!
எவ்விதமான 
பெரும் எதிர்பார்ப்புகளும்  இன்றி சேவைமனப்பான்மையுடன் இலவசமாக  சிகிச்சை தந்திடும்
மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை 
மருத்துவ வல்லுநர்களுக்கு பாராட்டும்,வாழ்த்தும்,நன்றியும் தெரிவிப்பதற்கு வாருங்கள்! 
நன்றி.
~முருகசெல்வராசன்.

சனி, 8 செப்டம்பர், 2018

Grant of Dearness Allowance to Central Government employees-Revised Rates effective from 1.7.2018...



திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கு தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (09/09/18)....

ஈரோடு மாநகராட்சிக்குரிய 1b நிலை HRA & CCA வழங்குவதற்கு , மேல் நடவடிக்கைளை விரைந்து செயல்படுத்துமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து மன்றப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தல்...

07/09/18,பிற்பகல் 03.00 மணியளவில்
 ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) 
திரு. சே.ஈஸ்வரன் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் ந.மணிவண்ணன், செயலாளர் மெ.சங்கர் ஆகியோர் சந்தித்து ஈரோடு மாவட்ட அரசிதழ் அறிவிக்கையில், ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து 16 கி.மீ சுற்றெல்லைக்குள் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட வருவாய் கிராமங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு உதவிட வேண்டுமாய் வலியுறுத்தினர்.

மதிப்புமிகு. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின்  அரசிதழ் அறிவிக்கை அச்சிடுவதற்கு வரும் திங்கட்கிழமை  ( 10/09/18) சேலத்திற்கு அனுப்பப்பட்டு,  ஒரு வாரத்தில் அறிவிக்கை வெளியாகும் என உறுதியான தகவல் அளித்தார்கள்.  

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் நாமக்கல் மாவட்டத்தின் 5 ஒன்றியங்களில் (பள்ளிபாளையம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், கபிலர்மலை மற்றும் பரமத்தி ) பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர் மற்றும் அரசூழியர்களுக்கும்  ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)நிலை வீட்டுவாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை வழங்க கோரி தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
/மெ.சங்கர்/

நாமக்கல் மாவட்டம்_ கிராம ஊராட்சிகள்_ தொழில் வரி _ மாவட்டம் முழுவதும் ஒரே சீரான அளவில் நிர்ணயம் செய்து உதவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டச் செயலாளர் அனுப்பியுள்ள விண்ணப்பம்...

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

எளிய அறிவியல் விளையாட்டு - காற்றில் நீந்தும் மீன் ...

எளிய அறிவியல் விளையாட்டு - தலையாட்டி பொம்மை...

27 ஆண்டுகளாக வாங்கப்படாத மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் ~ பல்கலைக்கழகம் அறிவிப்பு...

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (08/09/18)....