வேண்டுகோள்:
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு (09.09.18-ஞாயிறு)முற்பகல் 08.00மணிக்கு இராசீபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்
பள்ளியில்
இலவச கண் சிகிச்சை முகாமினை சேவை அமைப்புகளுடன் இணைந்து நடத்துகிறது .
அறிவொளி மட்டுமல்ல கண்ணொளியும் பெறுவதற்கு ஆசிரியர்மன்றம் சமூக அக்கறையுடன் பணியாற்றுகிறது;
சமூகநலனுக்கு பங்களிப்பு செய்கிறது.
ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களே!
ஆசிரியச்சகோதர -சகோதரிகளே!
கண்சிகிச்சை முகாமை வெற்றிபெறச்செய்யுங்கள்!
கண்சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவுங்கள்!
ஒவ்வொருவரும் தங்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் தயக்கமின்றி முகாம் மருத்துவர்களுடன் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்!
மேலதிகமான விபரங்களை
அறிந்து கொள்ளுங்கள்!
எவ்விதமான
பெரும் எதிர்பார்ப்புகளும் இன்றி சேவைமனப்பான்மையுடன் இலவசமாக சிகிச்சை தந்திடும்
மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை
மருத்துவ வல்லுநர்களுக்கு பாராட்டும்,வாழ்த்தும்,நன்றியும் தெரிவிப்பதற்கு வாருங்கள்!
நன்றி.
~முருகசெல்வராசன்.