நாளை (13/10/18 ) நடைபெறும் ஜாக்டோ ஜியோ வின் தொடர் வேலைநிறுத்த மாநாட்டிற்காக சேலம் செல்லும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளரும், ஜாக்டோ ஜியோ வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக அரசின் முன்னாள் சட்டமேலவை உறுப்பினருமான பாவலர் க.மீ அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட எல்லையில் நாமக்கல் மாவட்ட மன்றப் பொறுப்பாளர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெள்ளி, 12 அக்டோபர், 2018
வியாழன், 11 அக்டோபர், 2018
அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
நடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது.
இந்த புதிய பாடத்திட்டங்கள் *ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை* இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)