வியாழன், 18 அக்டோபர், 2018

NMMS TEST QUESTIONS - SAMPLES

இன்டர்நெட் ரகசியம் -உண்மைகள்

தற்காப்பு கலை' பயிற்சிக்கு, 238 பள்ளிகள் தேர்வு



அரசு பள்ளிகளில்,
'தற்காப்பு கலை' பயிற்சிக்கு, 238 பள்ளிகள் தேர்வாகி உள்ளன. 9ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,399 தொடக்கப்பள்ளிகள், 471 நடுநிலைப்பள்ளிகள், 320 உயர் நிலைப்பள்ளிகள், 407 மேல்நிலை என, 2,597 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
கராத்தே பயிற்சிஅரசு பள்ளி மாணவியரை பொறுத்த வரை, மன இறுக்கம், குடும்ப சூழலால் தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க, கடந்த ஆண்டு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், உடல் மற்றும் மனம் சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.இதன் மூலம், யோகா மற்றும் கராத்தே வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. இதன் மூலம், நெறி தவறும் மாணவியருக்கு, நல் வழிபடுத்தும் விதமாக இது அமைந்திருக்கிறது.தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்கம் கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு தற்காப்பு கலை என, அழைக்கப்படும், கராத்தே, ஜூடோ, டேக்வான்டோ பயிற்சிகள் துவக்கப்பட உள்ளன.100 மாணவியர்இத்திட்டம், கல்வித்துறையில் நடைமுறையில் இருந்தாலும், முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கல்வித்துறை விரிவுபடுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 238 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.இதில், 100 மாணவியருக்கு அதிகமாக இருக்கும் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. வழக்கமான பாடவேளை நாட்களை தவிர, விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.குறிப்பாக, கடந்த ஆண்டு சிறப்பு வகுப்புகளில், பயிற்சி பெற்ற மாணவியரை தவிர, புதிய மாணவியரை சிறப்பு வகுப்புகளுக்கு தேர்வு செய்வதற்கு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஒரே பள்ளி வளாகத்திற்குள் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.பயிற்சி பெறும் மாணவியரிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, கல்வித்துறைக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது.கராத்தே தற்காப்பு கலை பயிற்சி சிறப்பு வகுப்புகள், ஏற்கனவே, 8ம் வகுப்பு மாணவியருக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல், 9ம் வகுப்பு மாணவியருக்கும் கற்றுத்தர உள்ளனர். முதல் கட்டமாக, சிறப்பு வகுப்பு சொல்லிக் கொடுப்பதற்கு, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விரைவில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும்.

ஏற்படும் பலன்கள்! மாணவியருக்கு தன்னம்பிக்கை வளரும், பாலியல் சீண்டலின் போது, எதிரிகளை பந்தாடுவர், ஆளுமை திறனை வளர்த்துக்கொள்ள, மன தைரியம் பிறக்கும மனக் குழப்பம் தீரும்.

DSE Proceedings: புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 17.10.2018 நிலவரப்படி கோருதல்-சார்பு


அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள்(PTA) தொய்வின்றி நடைபெற பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!


புதன், 17 அக்டோபர், 2018

பள்ளிக் கல்வி-நாமக்கல் மாவட்டம்- சிறுசேமிப்பு -2018-19 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல்- சார்பு...

மின்சாரம் சேமித்தல் - எரிசக்தி விழிப்பணர்வு- ஓவியப்போட்டிகள் நடத்துதல் சார்ந்து நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்


(19/10/2018) விஜயதசமி அன்று மாணவர்கள் சேர்க்கை_ இயக்குநர் உத்தரவு



ஆசிரியர்களை பள்ளி வேலை நேரத்தில் வேலை நாட்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என உச்சநீதிமன்ற ஆணையை பின்பற்றி உத்தரவு....!!



சேமநல நிதி கணக்கில் உள்ள இருப்பு,மாதாந்திர சந்தா,கடன் மற்றும் விடுபட்ட சந்தா தொகை விவரங்கள் குறுந்தகவல்களாக (SMS) பெறுவதற்கு...