சனி, 20 அக்டோபர், 2018

தமிழ்நாடு காவல் சட்டங்கள்

Railway Recruitment Cell online examination results

அரசு பள்ளியில் இயற்கைமுறை காய்கறி தோட்டம் - மாணவிகள் அசத்தல்


OFF LINE மூலம் முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் - பிடிஏ ஆசிரியர்கள் அதிர்ச்சி


விதிகளைத் திருத்த சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்


BSNL தீபாவளி சிறப்பு தள்ளுபடிஅறிமுகம்


இந்திய கரன்சியை கண்காணிப்பு பட்டியலிருந்து நீக்க அமெரிக்கா முடிவு


பள்ளிக்கல்வி -மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் -தொடர்பாக -- DSE PROCEEDINGS




அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்க தமிழக அரசு முடிவு...


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது .தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதை தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்,அரசுப் பள்ளி மாணவிகள் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ பயிற்சி வழங்கப்பட உள்ளது .

சுமார் 5,711 உயர்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகளுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .

தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு - அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு...

சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க, ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.

 மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உணவில் ஆய்வு:

இந்நிலையில் சத்துணவு மையங்களில்சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம்1,520 மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

அன்றைய தினம் சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.

அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட வழங்கப்படும். மேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.