திங்கள், 22 அக்டோபர், 2018

சுற்றுலா பயணி அலுவலர் பதவி நேர்காணல்~ 2ம் தேதி தொடக்கம் டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு...

ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டம் சோதனை அடிப்படையில் 3 இடங்களில் அமைகிறது...

புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் பணிகள்...

மத்திய மின் நிறுவனத்தில் இன்ஜினியராகலாம்...

தேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரி பணிகள்...

9ம் வகுப்பு சமூக அறிவியல் - இரண்டாம் பருவ பாடபுத்தகத்தில் பிழைதிருத்தம்...

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

சந்தனத்தை முகர்வதன் மூலம் வழுக்கை தலைக்கு சிகிச்சை ஆராய்ச்சியில் கண்டு பிடிப்பு

சந்தனம் போன்ற வாசனையை முகர்வதன் மூலம்  வழுக்கை தலைக்கு புதிய சிகிச்சை முறையை ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர்.

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.

நாம் வாசனை பொருட்களை முகர்ந்தால் உடலில் உள்ள செல்கள் கொழுப்புச்சத்து ஏற்பிகள் என்று அழைக்கப்படும் மூலக்கூறுகள் மூளைக்கு ஒரு சிக்னலை அனுப்பும். இதன மூலம் முடி உதிர்வதை தடுக்கலாம் முடியை வளரச்செய்யலாம் என புதிய ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர்.

புதிய ஆராய்ச்சியின் படி மனித மயிர்க்கால்கள் தங்கள் சொந்த OR2AT4மூலம் வாசனை உணர்வுகளை வாங்கி வெளிப்படுத்துகின்றன. மற்றும் OR2AT4 ஒரு குறிப்பிட்ட வாசனை-சாந்தமான சந்தனம், சிந்தனை மூலக்கூறு அமைப்புடன் தொடர்பு கொள்ளும்போது இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது என கண்டறிந்து உள்ளனர்.

வேறுவிதமாக கூறினால், உங்கள் முடி - அல்லது மாறாக உங்கள் மயிர்க்கால்கள் - 'வாசனை' அல்லது சரியான ரசாயன கலவையை முகர்வத்ன் மூலம் மூலம் முடி இழப்பை தடுக்கல் ஒரு தீவிர புதிய வழியாக இருக்க முடியும்.
அது ஒரு சாதாரண மனித சிறு-உறுப்பு [ஒரு முடி] ஒரு எளிய, அழகுடன் பரவலாக பயன்படுத்தப்படும் நாற்றத்தினால் கட்டுப்படுத்த முடியும். என ஆராய்ச்சி மூலம் நிருபிக்கப்பட்டு உள்ளது இது முதல் முறையாகும்


"இது உண்மையில் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாகும்" என இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர் மற்றும் தோல் மருத்துவர் ரால்ப் பாஸ் தி இன்டிபென்டன்ட் பத்திரிகையில் தெரிவித்த்து உள்ளார்.சந்தன பொருட்கள் விற்கும் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனத்தால் இந்த ஆய்வின் மூலம் நிதியளிக்கப்பட்டது. இதற்கு அடுத்த படியான ஆய்வு ஆண்டு ஜனவரி மாதம் முடிவடையும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

சருமத்தில் கெரடினோசைட் பரவுவதை ஊக்குவிப்பதற்காக OR2AT4 கையாளப்படலாம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் (இது குணப்படுத்துவதற்கான குணத்தை ஊக்குவிக்கிறது)

மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவு


மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி உத்தரவிட்டுள்ளது.

2014 முதல் 2017-ம் ஆண்டு வரையில் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பெறப்பட்ட ஊழல் புகார்களையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான தகவல்களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய வனப்பணிகள் துறை அதிகாரி சஞ்சய் சதுர்வேதியின் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் ராதா கிருஷ்ணா மாதூர், பிரதமர் மோடியின் ஆட்சியின் போது எவ்வளவு கருப்பு பணம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது, அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பதை பட்டியலிடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட கருப்பு பணத்தை இந்தியர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தது தொடர்பான தகவல்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சதுர்வேதி, கருப்பு பணம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டது. கருப்பு பணம் தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளை, சட்டத்தின் “தகவல்” என்ற பிரிவின் கீழ் வாராது என்று கூறி நிராகரித்துவிட்டது. ஆனால் இந்த கருத்தை நிராகரித்துள்ள ஆணையர் ராதா கிருஷ்ணா தகவலை வெளிப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக சதுர்வேதி எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

2014 முதல் 2017-ம் ஆண்டு வரையில் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பெறப்பட்ட ஊழல் புகார்களையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான தகவல்களை வெளியிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்கள் தொடர்பாக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதையும் தெரியப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போதும் ஊழல் விவகாரங்களை வெளிக்கொண்டுவந்து, பிரச்சனைகளை எதிர்க்கொண்டவர் சஞ்சய் சதுர்வேதி ஆவார். எய்மஸ் மருத்துவமனையில் அதிகாரியாக இருந்தபோது குற்றச்சாட்டுக்களை வைத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

GST உடன் பேரிடர் வரி செலுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பரிந்துரை


6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளன ~ சர்வதேச இணைய பாதுகாப்பு நிறுவனம்