வியாழன், 25 அக்டோபர், 2018

தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2018 - " ஹால் டிக்கெட் " வெளியீடு!

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின்கல்வி திறன் அடிப்படையில், போட்டி தேர்வு நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, வரும், 4ம் தேதி நடக்க உள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு கூட நுழைவு சீட்டான, ஹால் டிக்கெட்டை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுஉள்ளது.

பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கலாம்.இதை, தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பணிநேரத்தில் வகுப்பறையில் இல்லாத அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்- தலைமை ஆசிரியருக்கு மெமோ

விழுப்புரம் அருகே பாடவேளையில் வகுப்பறையில் இல்லாமல் நீண்ட நேரம் வெளியே இருந்ததாக, அரசுப் பள்ளி ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
கல்வியில் பின்தங்கிய நிலையிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தை முன்னேற்றவும், பொதுத் தேர்வுகளில் இந்த மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் அருகேயுள்ள வி.அகரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு ஒரு வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததை அவர் கண்டார். இதுகுறித்து விசாரித்த போது, கணித ஆசிரியர்  பாடவேளையில் மாணவர்களுக்கு கற்றுத் தராமல் நீண்ட நேரமாக வெளியே இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
மேலும், ஆசிரியரை கண்காணிக்க தவறியதாக தலைமை ஆசிரியருக்கு மெமோ வழங்கி விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அரிய தமிழ் மின்னூல்கள் ( Tamil Digital Library e-Books)...

அரிய தமிழ் மின்னூல்கள்...
(Tamil Digital Library e-Books)
இதில் 8600 புத்தகங்கள் உள்ளன. புத்தக தலைப்பின் அருகில் பதிவிறக்கம் என இருக்கும். அதை சொடுக்கினால் புத்தகம் பதிவிறங்கும்.

Click here...
https://drive.google.com/file/d/10qYayZl_8ylPm3Jh4PsBs9xcLi6FIzcf/view?usp=drivesdk

அந்தமான் பகுதியில் காற்று சுழற்சி தமிழகம், புதுச்சேரியில் 2 நாள் மழை பெய்யும்...

பத்திரப்பதிவுக்கு வந்த பத்திரங்கள் நிலை என்ன? வீட்டில் இருந்தபடியே இணையவழியாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் புதிய வசதி~ பதிவுத்துறை ஐஜி தகவல்...

புதன், 24 அக்டோபர், 2018

மொபைல் ஆப் மூலம் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்~நாடு முழுவதும் அறிமுகம்…

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள்...

ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லையா? உஷார்... நோட்டீஸ் வரும் முதலில் அடுத்து பாயும் வழக்கு...

4 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்~ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்…

வானொலி பள்ளி மூலம் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி~ 13 வாரம் நடத்தப்படுகிறது…