பொதுவாக தம்பதியர் தங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள், குழந்தைக்கு கைக்கு கிடைக்காது பத்திரப்படுத்துவர். ஆனால், கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற பொருட்களை மறந்து விடுவர். குழந்தையின் மீது கவனம் செலுத்தி,
கருத்தில் கொள்ள வேண்டிய பொருட்கள் ஏராளம் உள்ளன.
அப்படி பெற்றோர்கள் ஆபத்து தரக்கூடிய பொருட்கள் என்று அறியாமல், குழந்தைக்கு பாதுகாப்பு தரக்கூடியவை என்று நினைத்து பயன்படுத்தும் பொருட்கள் அதாவது குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பயன்படுத்தப்படும் ஆபத்தான பொருட்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
பாதுகாப்பு தரும் பயம்!!! சாதாரணமாக கட்டிலில், மழலை உறக்கம் கொள்கையில், உருண்டு கீழே விழுந்து விடுமோ என்று அச்சத்தால், தடுப்புடன் கூடிய தொட்டிலை பெற்றோர் உபயோகிப்பர். குழந்தைகள் எந்த பருவத்தவராயினும், இந்த தடுப்புத் தொட்டில், பாதிப்பையே ஏற்படுத்துகிறது. குழந்தை உறக்கத்தில் தடுப்புகள் கொண்ட கட்டிலின் தடுப்பில் முட்டிக் கொள்கிறது, இல்லையேல் தடுப்பைத் தாண்ட முயற்சி செய்கிறது. குழந்தையின் இந்த செயல்கள் அபாயத்தையே உண்டு செய்யும்; குழந்தைகள் தன்னிச்சையாக இந்த செயல்களை செய்து விடுவதால், பெற்றோர்கள் எதிர்பாராத நேரத்தில் இந்த அபாய விஷயங்கள் நடைபெற்று விடுகின்றன. ஆகையால், இழப்பைத் தரும் இத்தகைய கட்டிலை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க முயற்சி செய்தல் நன்று.
தடுப்பு தலையணை
குழந்தைகளை படுக்க வைத்திருக்கும் பொழுது அவர்கள் உருண்டு அல்லது தவழ்ந்து வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க பெற்றோர் அவர்களை சுற்றி தடுப்பு அமைப்பது போன்று தலையணைகளை வைப்பார்கள். ஆனால் இந்த தலையணைகள் கடினமானதாகவோ அல்லது அதன் மீது குண்டக்க மண்டக்க குழந்தைகள் படுத்து உறங்கி விட்டாலோ அது குழந்தையின் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே பெற்றோர் இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
வாக்கர் - வம்பு
குழந்தைகள் படிப்படியான வளர்ச்சி நிலையை கொண்டவர்கள்; தகுந்த வயதை அடைந்தவுடன் தானாகவே நடக்க முயல்வர்; பெற்றோரும் தம்முடைய குழந்தைகளுக்கு சரியான பருவம் வரும் பொழுது நடக்க கற்று கொடுப்பர். பெற்றோர் குழந்தைகளின் கை பிடித்து நடக்க சொல்லித்தரும் பழக்கம் மாரி வாக்கர் வந்து விட்டது. இந்த வாக்கரில் குழந்தைகள் நடை பழகுவது இயற்கை முறையை விட தாமதமாகவே இருக்கும்; மேலும் இதில் குழந்தைகள் நடை பழகுவதால் அவர்களின் நடையின் தன்மை மாறலாம். எனவே பெற்றோர்கள் இந்த தேவையில்லாத வம்பு தரும் விஷயத்தை தவிப்பது நல்லது.
மெத்தை தரும் தீங்கு
குழந்தைகளை பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து ராஜா போல வளர்க்கிறேன் என்ற பெயரில், தவறான மெத்தை வகைகளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு உடம்பு வலி வரவழைத்த பெற்றோர் தான் அதிகம். குழந்தைகள் மெல்லிய தேகம் கொண்டவர்கள், அவர்களுக்கு அசௌகரியம் தரும் வகையில் கடினமான மேற்பரப்புடன் மெத்தை இருந்து அதனால் குழந்தைகள் அசௌகரியத்தை உணர்ந்தாலும் அவர்களால் வாய் திறந்து கூற முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை தேர்ந்து எடுத்து முயலுதல் வேண்டும்.
பொம்மைகள்
குழந்தைகளுக்கு பஞ்சு போன்று மெத்து மெத்தென்று இருக்கும் பொம்மைகள், புசு புசு பொம்மைகள், கனமான பொம்மைகள், கூர்மையான முனை கொண்ட பொம்மைகள் போன்ற பொம்மை வகையறாக்களை வாங்கி தருவதை பெற்றோர் தவிர்த்து விட வேண்டும். இல்லையேல் இந்த பொம்மைகளினால் குழந்தைகள் பாதிப்பை சந்திக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு எப்பொழுது பார்த்தாலும் பொம்மையையே காட்டி வளர்ப்பதை தவிர்த்து, இயற்கையான விஷயங்களையும் கொஞ்சம் காட்டி வளருங்கள்.
தாய்ப்பால் அளிக்கும் முறை
குழந்தைகளுக்கு சரியான நிலையில் தாய்ப்பால் தர வேண்டும். படுத்துக்க கொண்டே தாய்ப்பால் தருவது, அதிலும் அந்த படுத்த நிலையிலேயே அதிக நேரம் இருப்பது, ஒரு சாய்த்து படுத்து தாய்ப்பால் அளிப்பது, தாய்ப்பால் அளிக்கும் பொழுது பொம்மைகளை குழந்தைக்கு தருவது போன்ற விஷயங்கள் நல்லதல்ல. ஒரே மாதிரியான நிலையை, அதிலும் தவறான நிலையை அதிக காலம் தொடர்ந்தால் குழந்தைகளுக்கு தட்டையான தலை ஏற்படும் அபாயம் உள்ளது; ஆகையால் தாய்மார்கள் கொஞ்சம் கவனமாக செயல்படல் வேண்டும்.
உட்காருவதில் ஆப்பு
குழந்தைகள் உட்கார என பல வகை நாற்காலிகளும், அவர்கள் கழிவறையாக பயன்படுத்த கூட சில நாற்காலி போன்ற விஷயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு பல பெற்றோரால் வாங்கி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை குழந்தைகளுக்கு முழுமையான நன்மையை நல்குவதில்லை; இவற்றினால், குழந்தைகளுக்கு ஆபத்துகளும் ஏற்படுகின்றன.