வெள்ளி, 26 அக்டோபர், 2018

கனரா வங்கியில் பணி 2018


கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Probationary Officer
காலியிடங்கள்: 800
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம்
சம்பளம்: ரூ.23,700 - 42,020
வயது: 20 - 30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.708, மற்ற பிரிவினருக்கு ரூ.118
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13/11/2018
தேர்வு நடைபெறும் தேதி: 23/12/2018
மேலும் விவரங்களுக்கு என்ற https://www.careerpower.inலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

கல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் ஆயுர்வேத முறைகள்


மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே.


அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.


அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும். கல்லீரல் பிரச்சினையை முற்றிலும் தடுப்பதற்கு இயற்கை முறையிலான பாட்டி வைத்தியங்களை கையாளுவோம்.


மஞ்சள்


மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் தினமும் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் கல்லீரலை சுத்தம் செய்யலாம்.




முளைக்கீரை


முளைக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் ஆகியவை அதிகம் இருப்பதால் அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம்.


சீமைக் காட்டு முள்ளங்கி


சிறிது சீமை காட்டு முள்ளங்கி வேரை நீரில் போட்டு சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.



நெல்லி



தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே போதும் பல விதமான நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.


அதிமதுரம்


பல நோய்களுக்கு தீர்வு தரும் அதிமதுரம் டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் வரமால் தடுக்க முடியும்.



ஆளி விதைகள்


கல்லீரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் மர்றும் கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களை குறைக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன


இஞ்சி


இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும். எனவே, இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.



கிரீன் டீ


கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு அதிக காலம் இளமையாக இருக்கலாம்.மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகின்றன.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பயன்படுத்தப்படும் ஆபத்தான பொருட்கள்

பொதுவாக தம்பதியர் தங்களுக்கென ஒரு குழந்தை வந்தவுடன், வீட்டில் இருக்கும் சிறு சிறு பொருட்கள், குழந்தைக்கு கைக்கு கிடைக்காது பத்திரப்படுத்துவர். ஆனால், கருத்தில் கொள்ள வேண்டிய மற்ற பொருட்களை மறந்து விடுவர். குழந்தையின் மீது கவனம் செலுத்தி,

கருத்தில் கொள்ள வேண்டிய பொருட்கள் ஏராளம் உள்ளன.


அப்படி பெற்றோர்கள் ஆபத்து தரக்கூடிய பொருட்கள் என்று அறியாமல், குழந்தைக்கு பாதுகாப்பு தரக்கூடியவை என்று நினைத்து பயன்படுத்தும் பொருட்கள் அதாவது குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் என நம்பி பயன்படுத்தப்படும் ஆபத்தான பொருட்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.


பாதுகாப்பு தரும் பயம்!!! சாதாரணமாக கட்டிலில், மழலை உறக்கம் கொள்கையில், உருண்டு கீழே விழுந்து விடுமோ என்று அச்சத்தால், தடுப்புடன் கூடிய தொட்டிலை பெற்றோர் உபயோகிப்பர். குழந்தைகள் எந்த பருவத்தவராயினும், இந்த தடுப்புத் தொட்டில், பாதிப்பையே ஏற்படுத்துகிறது. குழந்தை உறக்கத்தில் தடுப்புகள் கொண்ட கட்டிலின் தடுப்பில் முட்டிக் கொள்கிறது, இல்லையேல் தடுப்பைத் தாண்ட முயற்சி செய்கிறது. குழந்தையின் இந்த செயல்கள் அபாயத்தையே உண்டு செய்யும்; குழந்தைகள் தன்னிச்சையாக இந்த செயல்களை செய்து விடுவதால், பெற்றோர்கள் எதிர்பாராத நேரத்தில் இந்த அபாய விஷயங்கள் நடைபெற்று விடுகின்றன. ஆகையால், இழப்பைத் தரும் இத்தகைய கட்டிலை குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க முயற்சி செய்தல் நன்று.


தடுப்பு தலையணை


குழந்தைகளை படுக்க வைத்திருக்கும் பொழுது அவர்கள் உருண்டு அல்லது தவழ்ந்து வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க பெற்றோர் அவர்களை சுற்றி தடுப்பு அமைப்பது போன்று தலையணைகளை வைப்பார்கள். ஆனால் இந்த தலையணைகள் கடினமானதாகவோ அல்லது அதன் மீது குண்டக்க மண்டக்க குழந்தைகள் படுத்து உறங்கி விட்டாலோ அது குழந்தையின் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே பெற்றோர் இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.


வாக்கர் - வம்பு


குழந்தைகள் படிப்படியான வளர்ச்சி நிலையை கொண்டவர்கள்; தகுந்த வயதை அடைந்தவுடன் தானாகவே நடக்க முயல்வர்; பெற்றோரும் தம்முடைய குழந்தைகளுக்கு சரியான பருவம் வரும் பொழுது நடக்க கற்று கொடுப்பர். பெற்றோர் குழந்தைகளின் கை பிடித்து நடக்க சொல்லித்தரும் பழக்கம் மாரி வாக்கர் வந்து விட்டது. இந்த வாக்கரில் குழந்தைகள் நடை பழகுவது இயற்கை முறையை விட தாமதமாகவே இருக்கும்; மேலும் இதில் குழந்தைகள் நடை பழகுவதால் அவர்களின் நடையின் தன்மை மாறலாம். எனவே பெற்றோர்கள் இந்த தேவையில்லாத வம்பு தரும் விஷயத்தை தவிப்பது நல்லது.


மெத்தை தரும் தீங்கு


குழந்தைகளை பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து ராஜா போல வளர்க்கிறேன் என்ற பெயரில், தவறான மெத்தை வகைகளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு உடம்பு வலி வரவழைத்த பெற்றோர் தான் அதிகம். குழந்தைகள் மெல்லிய தேகம் கொண்டவர்கள், அவர்களுக்கு அசௌகரியம் தரும் வகையில் கடினமான மேற்பரப்புடன் மெத்தை இருந்து அதனால் குழந்தைகள் அசௌகரியத்தை உணர்ந்தாலும் அவர்களால் வாய் திறந்து கூற முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் விஷயங்களை தேர்ந்து எடுத்து முயலுதல் வேண்டும்.


பொம்மைகள்


குழந்தைகளுக்கு பஞ்சு போன்று மெத்து மெத்தென்று இருக்கும் பொம்மைகள், புசு புசு பொம்மைகள், கனமான பொம்மைகள், கூர்மையான முனை கொண்ட பொம்மைகள் போன்ற பொம்மை வகையறாக்களை வாங்கி தருவதை பெற்றோர் தவிர்த்து விட வேண்டும். இல்லையேல் இந்த பொம்மைகளினால் குழந்தைகள் பாதிப்பை சந்திக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு எப்பொழுது பார்த்தாலும் பொம்மையையே காட்டி வளர்ப்பதை தவிர்த்து, இயற்கையான விஷயங்களையும் கொஞ்சம் காட்டி வளருங்கள்.


தாய்ப்பால் அளிக்கும் முறை


குழந்தைகளுக்கு சரியான நிலையில் தாய்ப்பால் தர வேண்டும். படுத்துக்க கொண்டே தாய்ப்பால் தருவது, அதிலும் அந்த படுத்த நிலையிலேயே அதிக நேரம் இருப்பது, ஒரு சாய்த்து படுத்து தாய்ப்பால் அளிப்பது, தாய்ப்பால் அளிக்கும் பொழுது பொம்மைகளை குழந்தைக்கு தருவது போன்ற விஷயங்கள் நல்லதல்ல. ஒரே மாதிரியான நிலையை, அதிலும் தவறான நிலையை அதிக காலம் தொடர்ந்தால் குழந்தைகளுக்கு தட்டையான தலை ஏற்படும் அபாயம் உள்ளது; ஆகையால் தாய்மார்கள் கொஞ்சம் கவனமாக செயல்படல் வேண்டும்.


உட்காருவதில் ஆப்பு


குழந்தைகள் உட்கார என பல வகை நாற்காலிகளும், அவர்கள் கழிவறையாக பயன்படுத்த கூட சில நாற்காலி போன்ற விஷயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு பல பெற்றோரால் வாங்கி குழந்தைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை குழந்தைகளுக்கு முழுமையான நன்மையை நல்குவதில்லை; இவற்றினால், குழந்தைகளுக்கு ஆபத்துகளும் ஏற்படுகின்றன.

CEO தலைமையில் ஒரே ஒன்றியத்தில் 126 பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் கல்விதுறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து 126 பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.




முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், 2 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் பேச்சு, எழுத்து உள்ளிட்ட கல்வித் திறனை பற்றி ஆராய்ந்தனர். பின்னர் விருத்தாச்சலம் தனியார் மண்டபத்தில் நடந்த திறன் மேம்பாட்டு மேலாய்வு கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி  தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். 



இதில் எந்தெந்த பள்ளிகள் மாணவர்கள் கல்வி திறனில் குறைவாக உள்ளார்கள் என்றும், அப்பள்ளி மாணவர்களை எவ்வாறு முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு  எடுத்துரைக்கப்பட்டது

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் சார்ந்து...

ஏடிஸ் கொசுப்புழு இல்லை என வியாழன் தோறும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவேண்டிய வாராந்திர சான்று...

வியாழன், 25 அக்டோபர், 2018

டெங்கு காய்ச்சலில் இருந்து மீள எளிய இயற்கை வழிகள் வழிகள்

TNPSC-Announced Junior Inspector posts

10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று, 'ரிசல்ட்

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று அறிவிக்கப்படுகின்றன.இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்புக்கான துணை தேர்வை, செப்டம்பரில் எழுதியோர், தேர்வு முடிவை இன்று தெரிந்து கொள்ளலாம். இன்று பிற்பகல் முதல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக பதிவிறக்கம் செய்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.மறுகூட்டலுக்கு, நாளை மற்றும் நாளை மறுநாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று, விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2018 - " ஹால் டிக்கெட் " வெளியீடு!

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின்கல்வி திறன் அடிப்படையில், போட்டி தேர்வு நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.இதற்கு, மாநில மற்றும் தேசிய அளவில், திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு, வரும், 4ம் தேதி நடக்க உள்ளது.தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, தேர்வு கூட நுழைவு சீட்டான, ஹால் டிக்கெட்டை, அரசு தேர்வுத்துறை வெளியிட்டுஉள்ளது.

பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கலாம்.இதை, தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.