வெள்ளி, 26 அக்டோபர், 2018

அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் - அமைச்சர்கள்கூட்டத்தில் முடிவு!

அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில், 52 ஆயிரம் குழந்தைகள் படிக்கக் கூடிய அங்கன்வாடி மையங்கள் அரசு பள்ளிகள் வளாகத்திலேயே இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 52 ஆயிரம் குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி மாதம் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுடன் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக மீதமுள்ள குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்_ பி.எட் சேர்க்கை தேதி நீட்டிப்பு_ கடைசி தேதி _( 15/11/18)

கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் திரைவீழ்த்திகளில் இவற்றை பயன்படுத்த ஏதுவாகும்.

மேலும், PDF file களையும் download செய்து பள்ளிகளில் print செய்து பயன்படுத்தும் வசதியும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 

தமிழ்நாடு அரசு - மருத்துவக்கல்வி இயக்ககம்- மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை விவரம்


சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்~ கலெக்டர் வேண்டுகோள்…

அனைத்து குடியிருப்பு, வணிக கட்டிடங்களில் பேட்டரி கார் சார்ஜிங் வசதி இனி கட்டாயம்~கட்டிட விதிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டம்...

உதவி தோட்டக்கலை அலுவலர் பதவி ஒரே நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ~டிஎன்பிஎஸ்சி தகவல்...

Whatsapp ல் ஸ்டிக்கர்கள்… அறிமுகம்.டவுன்லோட் செய்வது எப்படி ?


12 ஸ்டிக்கர் பேக்ஸ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
வாட்ஸ்அப்பிலும் ஸ்டிக்கர்கள்… டவுன்லோட் செய்வது எப்படி ?
WhatsApp Stickers : வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே எமோஜீஸ், அனிமேட்டட் GIFகள் என பொழுதுபோக்கிற்கு குறையே இல்லாத அளவில் புதுப்புது அம்சங்கள் நிறைந்துள்ளன.
தற்போது வாட்ஸ்அப் பொழுதுபோக்கினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.
இந்த சிறப்பம்சங்கள் தற்போது இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பீட்டா வெர்ஷன்களில் இயங்கி வருகிறது. பழைய வெர்ஷன் வாட்ஸ்ஆப்களை உபயோகப்படுத்தும் ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்கள் 2.18.329 இந்த வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆப்பிள் போன்களை உபயோகிப்பவர்கள் 2.18.100 இந்த வெர்ஷனை அப்டேட் செய்து கொள்ளலாம். மொத்தம் 12 ஸ்டிக்கர் பேக்ஸ்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
WhatsApp Stickers எப்படி டவுன்லோடு செய்வது ?
வாட்ஸ்அப்பில் சாட் கீபோர்டினை க்ளிக் செய்தால் அதிலேயே ஸ்டிக்கர் பட்டன் இருக்கும்.
அதனை க்ளிக் செய்தால் ஸ்டிக்கர் ஸ்டோர் டவுன்லோட் ஆகும்.
ஸ்டிக்கர்களுக்கென தனி கேட்டகிரியை உருவாக்கியுள்ளது வாட்ஸ்ஆப். கீபோர்ட் மானிட்டரில் இருக்கும் + என்ற பட்டனை க்ளிக் செய்தால் 12 ஸ்டிக்கர் பேக்குகளும் கிடைக்கும்..
தங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் ஒருவரால் டவுன்லோட் செய்து கொள்ள இயலும்.
வாட்ஸ்அப் மூலமாகவும் ஸ்டிக்கெர்களை அனுப்பலாம்
உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களுக்கு நட்சத்திரம் கொடுத்து வைக்கலாம். அதே போல் ஹிஸ்டரி டேப்பில் எந்த ஸ்டிக்கரை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியினையும் இந்த அப்டேட் உருவாக்கியிருக்கிறது.
வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 annual developer மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களின் விவரங்கள் கோருவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


அரசு தேர்வு துறை - புதிதாக அமைக்கப்பட்ட கல்வி மாவட்டங்களில் அரசு தேர்வு சேவை மையம் அமைப்பது சார்ந்து - உத்தரவு