சனி, 27 அக்டோபர், 2018
DEE PROCEEDINGS- அரசு உதவிபெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 ல் வகுக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிடங்கள் அரசிற்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருப்பவர்கள்(Present Incubent) ஒய்வு பெற்ற பிறகு மீண்டும் நிரப்பக்கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய அறிவுறுத்தியது-சார்ந்து..
டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த தமிழக அரசு திட்டம்
டெங்கு ஒழிப்பில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், சுகாதாரத் துறை புதிய முயற்சி
Saturday, October 27, 2018
டெங்கு ஒழிப்பில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், சுகாதாரத் துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலின் தாக்கம் பொதுமக்களை மிரள வைத்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான, 'ஏடிஸ்' வகை கொசுக்களின், புழு நிலையிலான 'லார்வா'க்களை கண்டறிந்து ஒழிப்பது, சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து, கொசுப் புழுக்களை ஒழிக்கும் புதிய முயற்சியில், சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:மாணவர்களின் வீட்டிலோ, அருகிலோ, தெருக்களிலோ, தேங்கி இருக்கும் நன்னீரை ஆய்வு செய்து, அதில் புழுக்கள் இருந்தால், சேகரித்து வரும்படி, ஆசிரியர்கள் வழியாக, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு, அவர்கள் சேகரித்து வரும் புழுக்களின் தன்மைகளை, பூச்சியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்வர்.அவை, எந்த மாதிரியான நோய்களை ஏற்படுத்தும்; அதிலிருந்து தப்பிக்க எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்; நோய் வந்த பின், எவ்வாறு தங்களையும், சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகள், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதுதவிர, கொசு புழுவை சேகரித்து வரும், மாணவர்களை, மற்ற மாணவர்கள் முன்னிலையில் பாராட்டி, ஊக்கப்படுத்துகிறோம். இதனால், கொசுப்புழுக்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, அழிக்கப்படுகிறது. அதேபோல, சுத்தமாக கை கழுவுவதன் வாயிலாக, பன்றி காய்ச்சலில் இருந்து, 80 சதவீதம் தப்பிக்க முடியும். இது குறித்து எல்லாம், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்
பஸ் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க கருவி கண்டுபிடிப்பு : அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்!
பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணிப்பதை தடுக்கும் வகையில்,
கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணவிகள் வைத்த அறிவியல் படைப்பு, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாமிடம் பிடித்துள்ளது
திருச்சியில், அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் அறிவியல் படைப்பு, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.
இந்த படைப்பு குறித்து மாணவிகள் கூறியதாவது.
பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஆண்டிற்கு 3,200 பேர் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இவற்றை தடுக்கவே இந்த அறிவியல் படைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படிக்கட்டில் ஹைட்ராலிக் எச்சரிக்கை அலாரம் பொருத்தப்படுகிறது.
பஸ் படிக்கட்டில் பயணிகள் நிற்கும் போது, நிலையான அழுத்தம் ஏற்படுவதால் பஸ்சின் வேகம் 80 சதவீதம் வரை தானாகவே குறையும். மேலும், படிக்கட்டில் நிற்காதீர் என எச்சரிக்கை அலாரமும் ஒலிக்கும். இதன் மூலம் படிக்கட்டில் நிற்பதும், விபத்தும் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு மாணவிகள் கூறினர்.
உள்ளங்கையில் Mini Printer - HP நிறுவனம் அறிமுகம்
பிரிண்டர் உற்பத்தியில் முன்னனியில் உள்ள நிறுவனம் HP.
பிரிணடர் என்றாலே பெரிய அளவில் தான் இருக்கும். இதன் எடை எப்படியும் அதிகமாகதான் இருக்கும். இந்த பிரிண்டர் 2.3″ * 3.4″ அளவுள்ள புகைப்படங்களை அச்சிடும் திறன் கொண்டது.
இந்த புகைப்பட பிரிண்டரை எளிதாக கையில் எடுத்து செல்லும் அளவிற்க்கு சிறியது. எளிதாக மொபைலில் இருந்து புளூடூத் மூலம் இதனை இயக்கலாம். HP Sprocket plus எனும் பெயர் கொண்ட இந்த பிரிண்டர் அமேசானில் 10 அச்சிடும் பேப்பர்களோடு ரூ.8,999/- க்கு கிடைக்கிறது. கூடுதலாக ரூ.800 செலுத்தினால் 20 அச்சிடும் பேப்பர்களோடு கிடைக்கும்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018
அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகள் இனி அரசுப் பள்ளிகளில் - அமைச்சர்கள்கூட்டத்தில் முடிவு!
அங்கன்வாடிகளில் படிக்கும் 52 ஆயிரம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இந்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளில் சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில், 52 ஆயிரம் குழந்தைகள் படிக்கக் கூடிய அங்கன்வாடி மையங்கள் அரசு பள்ளிகள் வளாகத்திலேயே இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 52 ஆயிரம் குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் வரும் ஜனவரி மாதம் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவுடன் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக மீதமுள்ள குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)