ஞாயிறு, 28 அக்டோபர், 2018

மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக அரசு அலுவலகங்களில் சாய்வு தளம், லிப்ட், கழிப்பறை அமைக்க உத்தரவு...

போசன் அபியான் திட்டம் 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்த முடிவு...

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறுவது கட்டாயம்~ தீபாவளி இனிப்பு, காரம் விற்பவர்களுக்கு கட்டுப்பாடு…

ஜாக்டோ ஜியோ- இன்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்- பத்திரிக்கை செய்தி வெளியீடு



ENGLISH READING PRACTICE FOR PRIMARY STUDENTS...

Samagra Shiksha - New School Visit Format ( Primary And Upper Primary )...

OP அடிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை - CEO


அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் எப்போது? ~ அமைச்சர் விளக்கம்


பள்ளி செல்லாத சிறுமிக்கு 10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி


பள்ளிக்கே செல்லாமல், வீட்டிலேயே படித்த 12 வயது சிறுமி 10-ம் வகுப்புத் தேர்வு எழுத மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெறும் மத்தியாமிக் தேர்வில் 12-வயது சிறுமி பங்கேற்று பொதுத்தேர்வு எழுதலாம்என்று தெரிவித்துள்ளது.
ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அனினுல். இவரின் 12வயது மகள் சைபா கத்தூன். இந்த சிறுமிசிறுவயது முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே படித்து வந்துள்ளார். இந்நிலையில், 10-ம்வகுப்புதேர்வு எழுத வேண்டும் என்றுவிரும்பியதால், அவர் தகுதித் தேர்வு எழுதியுள்ளார்.

 அதில் தேர்வானதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து மேற்கு வங்க பள்ளிக்கல்வித்துறை வாரியத்தின் தலைவர் கல்யாண்மோய் கங்குலிகூறுகையில், சைபா கத்தூன் என்ற 12 வயது சிறுமி இதுவரை பள்ளிக்கே செல்லாமல் வீட்டில் இருந்தபடியேபடித்துள்ளார். அவர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும் என்று அவரின் தந்தை முகமது அனினுல்விண்ணப்பம் அளித்திருந்தார். பள்ளியில் படிக்காமல் தனித்தேர்வு எழுதுபவர்களுக்கான தகுதித் தேர்வுஆகஸ்ட் மாதம் நடந்தது.

அதில் சைபா கத்தூன் 52 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, 12 வயதுகத்தூன் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 20 ஆண்டுகள் வரலாற்றில் 12 வயதுசிறுமி ஒருவர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியதில்லை. 10-ம் வகுப்புத் தேர்வு எழுத 14வயது நிறைவடைந்திருக்கவேண்டும். 

ஆனால், கத்தூன் சிறப்பாகப் படித்து தேர்ச்சி பெற்றுள்ளதால், அவருக்கு இந்தவாய்ப்புவழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
சைபா கத்தூன் கடந்த ஆகஸ்ட் மாதம் தகுதித் தேர்வு எழுதினார், இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 11-ம்தேதி வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி -- கல்வி அமைச்சர்

தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஓடைதூர்வாரப்பட உள்ளதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பண்ணிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.

தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன.
இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.