வெள்ளி, 9 நவம்பர், 2018

வாட்ஸ் ஆப் ஸ்டிக்கரில் உங்கள் முகமும் வரும்...

Whatsapp stickers : செல்போன் சேட்டிங் ஆப்களில் தற்போது பிரபலமாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் புதிய வரவு ஸ்டிக்கர்ஸ். அதில் உங்கள் முகத்தையும் வைக்கலாம்.



இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் பிரபலமான ஆப் வாட்ஸ் ஆப் தான். இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. முகநூல் நிர்வாகத்தில் எப்போது கை மாறியதோ அன்று முதல் ஏதேதோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

 அந்த வகையில், இம்மாதத்தின் புதிய வரவு தான் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்ஸ் (Whatsapp stickers). ஸ்மைலி, ஜிஃப் போலவே இந்த ஸ்டிக்கர்ஸும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் மெச்சன்ஜர், ஹைக் செயலிகளில் இருப்பது போலவே இனி வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களும் ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்தலாம்.



Whatsapp stickers : வாட்ஸ் ஆப்பில் கஸ்டம் ஸ்டிக்கர்ஸ் செய்வது எப்படி
முதலில் ஸ்டிக்கர்ஸ் கேலரியில், வித விதமாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டது. அவற்றை டவுன்லோடு செய்து நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் இப்போது உங்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷன் வந்துள்ளது.

இனி அவர்கள் கொடுக்கும் ஸ்டிக்கர்ஸ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் முகத்தை கொண்டு கூட வெவ்வேறு முகபாவனைகளை வைத்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம். ஆனால் அதை செய்வது எப்படி? இதோ உங்களுக்காக சொல்கிறோம் நோட் செய்யுங்கள்:



கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 'ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் (Sticker maker for WhatsApp) என்ற செயலியை டவுன்லோடு செய்யவும்.




பின்னர், அதில் ஸ்டிக்கர் உருவாக்க ஒரு ஆப்ஷன் இருக்கும் (Create a new sticker pack). அதை க்ளிக் செய்யவும்.


இது உங்களை ஒரு பேனலுக்கு அழைத்துச் செல்லும். அதில் இந்த ஸ்டிக்கர்ஸ் பேக்கஜுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லும். மானே தேனே என்று மனம் போல் பெயர் வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் உங்கள் முகம் கொண்ட 30 வகை ஸ்டிக்கர்ஸ் உருவாக்கலாம்.


பின்பு அது ஒரு ஆப்ஷன் போல தென்படும். என்னடா இது? ஸ்டிக்கர் போல காண்பிக்கவில்லையே என்று டென்ஷன் ஆக வேண்டாம். அது ஸ்டிக்கர் ஆப்ஷன் தான்.



இப்போது ஆட் ஸ்டிக்கர் என்று கொடுங்கள். பின்பு உங்களுக்கு என்ன புகைப்படம் வேண்டுமோ அதை க்ளிக் செய்யுங்கள்.

அந்த புகைப்படத்திற்கு கீழே உள்ள எடிட்டிங் வசதி கொண்டு பேக்ரவுண்டு அனைத்தையும் தூக்கிவிடுங்கள்.

இறுதியாக ஆட் டூ ஸ்டிக்கர் என்று கொடுங்கள். அவ்வளவு தான் ஸ்டிக்கர்ஸ் ரெடி


ரத்த வகை, கியூ.ஆர், பார் கோடு வசதியுடன் 70.59 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு~விரைவில் வழங்க ஏற்பாடு...

மருத்துவத்தைத் தொடர்ந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு கேட் தேர்வு...

பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை...

தென் மாவட்டங்களில் மழை பெய்யும்~வானிலை மையம் அறிவிப்பு...

வரும்14ம் தேதி ரசகுல்லா தினம்~மேற்கு வங்கம் முடிவு...

வியாழன், 8 நவம்பர், 2018

கல்வித்துறை அலுவலகங்களின் பணியாற்றும் அரசுப் பணியாளர் அனைவரும் அலுவலக நேரங்களில் கட்டாயமாக அடையாள அட்டையினை அணிந்து பணியாற்ற வேண்டும் - திண்டுக்கல் CEO செயல்முறைகள்!


ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க முதன்மை கல்வி அவர்களின் தலைமையில் ஜமாபந்தி


அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க ஏற்பாடு

நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க ஏற்பாடு

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்துடன்கூடிய வாழ்த்து அட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில் அந்தந்த குழந்தைகளின் புகைப்படங்களை இணைத்து அவர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். முதல்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது.


குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு இலவச டிவிடி


குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி. வழங்கும் திட்டத்தை குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட சமூகம் (சி.எஃப்.எஸ்.ஐ.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் சிஎஃப்எஸ்ஐ, குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், நீதி போதனைகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.

குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட வசதியாக இலவச டி.வி.டி.-க்களை சி.எஃப்.எஸ்.ஐ. வழங்கவுள்ளது. விருப்பமுள்ள பள்ளிகள் 044 -2498 1159 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது