படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 32வது விதியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கீழ்காணும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
(1) அனைவருக்கும் சம உரிமை (விதி 14):
இந்திய திருநாட்டில் உள்ள எந்த மாநிலத்திலும் எந்த பகுதியிலும் நமது நாட்டின் குடிமகன் சகல உரிமைகளுடன் வாழும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தனி மனிதரின் உரிமையை பறிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது. அதை நிராகரிக்கவும் முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர், அவரின் சமூக பாதுகாப்பை பெறும் உரிமையை பெற்றுள்ளான்.
(2) சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் ஆதாரத்தின் மீதான ஏற்றதாழ்வு தடை உரிமை (விதி 15):
நமது நாட்டில் வாழும் குடிமக்களிள் எந்த சாதி, மதம், மொழி, பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டு சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பார்க்கும் போது, குறிப்பிட்ட பகுதியில் தான் வசிக்க வேண்டும், குறிப்பிட்ட இடத்திற்கு செல்லக்கூடாது என்பது உள்பட எந்த கட்டுபாடுகளும் விதிக்க முடியாது. குறிப்பாக வர்த்தக நிலையங்கள், ஓட்டல்கள், பொது பொழுதுபோக்கு அரங்கங்களுக்கு செல்வது அல்லது பொது மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு, ஏரி, குளம், குளியல் அறை, சாலை, மக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்பட பொது இடங்களுக்கு செல்வதற்கு யாரும் நிர்பந்தம் செய்யவோ, தடை விதிக்கவோ முடியாது. மேலும் பழைய பஞ்சாங்கங்களை கூறி பெண்கள், சிறுவர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் அது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த மாற்றத்தை தடுக்க அரசாங்கம் சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும்.
(3) பொது சேவையில் சம வாய்ப்பு உரிமை (விதி 16):
மாநில அரசின் கீழ் இயங்கி வரும் எந்த துறையிலும் ஊழியர்கள் நியமனம் செய்யும் விஷயத்தில் நமது நாட்டில் வாழும் அனைத்து குடிமகன்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியை பெற எந்த சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றை காரணம் காட்டி ஒதுக்க முடியாது. அரசு பணியில் சேர தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியாக இட ஒதுக்கீடு உரிமையை அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. இது போன்ற சட்டம் கொண்டு வரும் அதிகாரம் மக்கள் மன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
(4) மத வழிப்பாட்டு உரிமை (விதி 17):
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் தனிமனித உரிமையை காப்பாற்றி கொள்ளும் அதிகாரம் படைத்துள்ளனர். குறிப்பிட்ட மத வழிபாட்டை பின்பற்றும் மக்கள் தான் வாழ வேண்டும் என்ற விதிமுறை எதுவும் கிடையாது. நாட்டு குடிமக்கள் தாங்கள் விரும்பும் மத வழிபாடுகளை சுதந்திரமாக செயல்படுத்த உரிமை உள்ளது. எந்தவித அடிப்படை காரணங்களை காட்டிலும் அதை தடுக்க முடியாது. அப்படி தடுத்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்.
(5) விருது வழங்குவதை தடை செய்யும் உரிமை (விதி 18):
நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகள் பல துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தில் இந்திய ராணுவம் மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். இது தவிர வேறு எந்த விருதும் வழங்கக்கூடாது. இந்திய குடிமகனாக இருப்பவர் வெளிநாட்டில் விருது பெறக்கூடாது. இந்திய குடிமகனாக இல்லாத வெளிநாட்டை சேர்ந்த நபர், இந்தியாவில் லாபம் தரும் பெரிய பதவியிலோ அல்லது கவுரவமான பொறுப்பில் நியமனம் செய்ய வேண்டுமானால், இந்திய குடியரசு தலைவரின் முழு அனுமதி பெற வேண்டும்.
(6) பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமை:
நமது அரசியலமைப்பு சட்டம் 19வது பிரிவின் கீழ்கண்ட சுதந்திர உரிமைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
அ. பேச்சு சுதந்திர உரிமை (இது பத்திரிக்கை சுதந்திரம் உள்பட).
ஆ. அமைதியாக மற்றும் சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை.
இ. சங்கம், அமைப்புகள் தொடங்கும் உரிமை.
ஈ. இந்திய தேசம் முழுவதும் சுற்று பயணம் செய்யும் உரிமை.
உ. இந்தியாவின் எந்த பகுதியிலும் சுதந்திரமாக வாழும் உரிமை.
ஊ. நாட்டில் எந்த பகுதியிலும் சுதந்திரமாக தொழில், வர்த்தகம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தகைய உரிமையை யாரும் தடுக்க முடியாது: இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கவும், சுதந்திர நாட்டின் மேன்மையை போற்றவும், நீதி, நேர்மை, மக்களாட்சி தத்துவத்தை நிலை நாட்டவும், பொது வாழ்வில் தூய்மை, நம்பகதன்மையை காக்கவும் இத்தகையை உரிமையை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கான உரிமைகளை பெற்று தர மக்கள் மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கம் வகுத்து செயல்படுத்தும் சட்டங்களை செயல்படுத்துவதா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும் உரிமை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.