சனி, 17 நவம்பர், 2018

அரசாணை -238-நாள் -13.11.2018பள்ளிக்கல்வி -அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01.08.2018-நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்ய புதிய நெறிமுறைகள்









தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு




கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் கட்டிடங்கள் பழுது ஏற்பட்டமை - உத்தேச திட்ட மதிப்பீட்டு பட்டியல் தயாரித்து அனுப்புதல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Tamilnadu Government T.A Rules

பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்தை அரசே வழங்கும்~பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு...

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் முகாம்~பள்ளிக்கல்வித்துறை…

வெள்ளி, 16 நவம்பர், 2018

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.



இதையொட்டி கால், கை ஊனமுற்றோர், குள்ளமானோர்களுக்கு 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்பட்டன.
இதேபோல் முற்றிலும் பார்வையற்றோர் மற்றும் மிக குறைந்த பார்வையற்றோருக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதுதவிர கை, கால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், பார்வையற்றோருக்கு கைப்பந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


தூய்மையான பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு போட்டி: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்



நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் பள்ளி கல்வித்துறையின் மூலம் “தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டம்“ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார்.

இதேபோல் பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எலச்சிபாளையம், கொழிஞ்சிப்பட்டி, ஆர்.புதுப்பட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், வலையப்பட்டி மற்றும் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகள் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்த பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ரூ.10 ஆயிரம் காசோலையும், நற்சான்றிதழும் வழங்கினார். மேலும் சுகாதாரம் சார்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் 39 பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் காசோலையும், நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் “தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு!


     

ஆந்திராவில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை சந்திரபாபு நாயுடு அரசு திரும்ப பெற்றது

 ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார். 


இது, நேற்று இரவு வெளியே தெரியவந்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின் பிரிவு 6-ன் படி மாநில அரசு ஒப்புதலை திரும்ப பெறலாம். அதன்படியே மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனுமதி வழங்கிய மூன்று மாதங்களில் ஆந்திர மாநில அரசிடம் இருந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 சிபிஐக்கு அனுமதி வழங்கும் வகையில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திரா அரசு உத்தரவை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே மாநில விசாரணைப்பிரிவின் அதிகார வரம்பை விஸ்தரிக்க ஆந்திரா அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
இந்நடவடிக்கையை ஆதரித்துள்ள ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா, சிபிஐக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “எங்களுக்கு சிபிஐயின் மீது நம்பிக்கையுள்ளது. ஆனால் சிபிஐயின் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுக்கள் எங்களுடைய ஒப்புதலை திரும்ப பெற செய்யும் கட்டாயத்திற்கு தள்ளியது. சிபிஐ ஒவ்வொரு வழக்கிற்கும் அனுமதியைப் பெற வேண்டும்,” என கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடனான ஆலோசனையை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடக அரசும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது என்று கூறியுள்ள ராஜப்பா, மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு எந்தஒரு தடையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். 
“எங்களுக்கு எப்போது எல்லாம் விசாரணை தொடர்பாக சிபிஐ கோரிக்கை விடுக்கிறதோ அப்போது எல்லாம் தேவையான அனுமதியை வழங்குவோம்,” எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சிபிஐயை தடை செய்வதன் உள்நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையை மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். சிபிஐயை ஆந்திராவிற்கு பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என சந்திரபாபு நாயுடு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பா.ஜனதாவால் நோட் ஜேஞ்சராக வேண்டுமென்றால் இருக்கலாம், கேம் ஜேஞ்சராக இருக்க முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார் .