வணக்கம்!
கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள் 07.12.18 பிற்பகல் 05.00 மணிக்கு சந்தித்தனர்.
🔖 ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரிக்கு ETDS செய்து Form -16 உடனே வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.
🔖 ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் CPS missing credit ஐ உடன் சரி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
🔖 நவம்பர் மாத குறைதீர் நாளில் அளிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி முன் அனுமதி விண்ணப்பங்கள் மீது உடன் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்பட்டது.
🔖 ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் இன்னும் சற்றொப்ப 35 க்கு பேருக்கு மேல் மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைக்கவில்லை. உடன் பெற்று வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
🔖 தமிழக அரசே 14 வகையான நலத்திட்ட உதவிகளை மாணவர்களுக்கு வழங்கி வரும் நிலையில், பருவத்தேர்வு வினாத்தாளுக்கு பணம் வசூலிப்பதை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பு நிகழ்வில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரா.ரவிக்குமார், ஒன்றியத்தலைவர் ந.மணிவண்ணன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
/மெ.சங்கர் /