வெள்ளி, 14 டிசம்பர், 2018
வியாழன், 13 டிசம்பர், 2018
ஜனவரி-21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்...
2019 ஜனவரி 21 ஆம் தேதி முதல் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
தென் மாவட்டங்களில் உள்ள 4000 உபரி ஆசிரியர்கள் பிற மாவட்டங்களுக்கு பணி நிரவல் செய்ய ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன்
தென் மாவட்டங்களில் உபரியாக உள்ள, 4,000 ஆசிரியர்களை, மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, 5,472 இடங்களுக்கு மாற்ற ஆலோசித்து வருகிறோம்.
புதிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு, வழக்குகள் தடையாக உள்ளன. வழக்குகளை முடித்து, டி.ஆர்.பி., வழியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நடப்பு கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் படிக்கும், 26 ஆயிரம் மாணவர்களுக்கு, 413 மையங்களில், 'நீட்' தேர்வு பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. கடந்த, 2017 - 18ம் கல்வி ஆண்டில், 3,192 மாணவர்களுக்கு, தனியார் நிறுவனமும், தனியார் கல்லுாரிகளும் செலவு செய்து, நீட் பயிற்சியை இலவசமாக வழங்கின. அரசு, ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.தமிழகத்தில், 33 அரசு பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை; 1,334 பள்ளிகளில், ஒன்பதுக்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.எந்த பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. அறிக்கை விடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இதுபோன்ற அரசு பள்ளிகளை நடத்த ஆலோசனை அளித்தால், ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)