புதன், 9 ஜனவரி, 2019

பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்







இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது...

அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை ஒரிரு மணிநேரம் சென்று பாட நடத்தவேண்டும் என்று அரசின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அரசை வலியுறுத்துகிறது.. 

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவது என்பதை உடனே கைவிட்டு, பள்ளி முன்பருவ மழலையர் பயிற்சி     பெற்ற மழலையர் ஆசிரியைகளை (அங்கன்வாடி மழழையர் பள்ளிகளில் பணி புரியவதற்காக பயிற்சி பெற்ற பெண் ஆசிரியைகளை ) பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது 

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கு மாற்றுவதும், பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றுவதும், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களை கீழ்வகுப்புகளுக்கு பயிற்றுவிக்க மாற்றுவதை ஆசிரியர்களுக்கு கடும் மன உலைச்சலை ஏற்படுத்தும்.

மன உளைச்சல் காரணமாக  சில விபரித நிகழ்வுக்கு செல்ல நேரிடும்.

எனவே அந்தந்த
பட்டயப் படிப்பு முடித்தவர்களை அவரவர் தகுதிக்கான வேலையில் இருந்து கீழ் நிலைக்கு மாற்றுவது என்பது முற்றிலும் முரணான ஒன்று.

ஆகையால்
அரசின் தவறான இந்த முடிவை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.அரசு இதற்கான உத்தரவை  உடன் திரும்ப பெற வேண்டுமென்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அரசை வலியுறுத்துகிறது. 

பாவலர் க.மீனாட்சிசுந்தரம்Ex.mlc
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

G.O. No:6 "C and D" பிரிவு ஒய்வூதியதார்கள் /குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பு







TET Not Necessary For Already Working Government Teachers - High Court Judgement Order Published...

C மற்றும் D பிரிவு பணியாளர்களின் ஊதிய விகிதங்கள்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ கபிலர்மலை ஒன்றிய செயற்குழுக் கூட்டம் ~ நாளிதழ் செய்திகளில்...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தை தவிர்க்க சித்திக், ஸ்ரீதர் குழு பரிந்துரைகளை உடனே செயல்படுத்த வேண்டும்~தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…

அடுத்த கல்வியாண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ புத்தகம் இல்லை.ஒரே புத்தகம் மட்டும்தான்...

தமிழகம் முழுவதும் 8,704 பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்களுக்கு 16,430 பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தம்...

தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி~ முதல்வர் அறிவிப்பு...

தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.

விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும்
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது.