புதன், 9 ஜனவரி, 2019
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது...
அங்கன்வாடி மையத்துக்கு ஆசிரியர் ஒதுக்கீடு, ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரை, அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரை ஒரிரு மணிநேரம் சென்று பாட நடத்தவேண்டும் என்று அரசின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அரசை வலியுறுத்துகிறது..
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவது என்பதை உடனே கைவிட்டு, பள்ளி முன்பருவ மழலையர் பயிற்சி பெற்ற மழலையர் ஆசிரியைகளை (அங்கன்வாடி மழழையர் பள்ளிகளில் பணி புரியவதற்காக பயிற்சி பெற்ற பெண் ஆசிரியைகளை ) பணி நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கு மாற்றுவதும், பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றுவதும், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களை கீழ்வகுப்புகளுக்கு பயிற்றுவிக்க மாற்றுவதை ஆசிரியர்களுக்கு கடும் மன உலைச்சலை ஏற்படுத்தும்.
மன உளைச்சல் காரணமாக சில விபரித நிகழ்வுக்கு செல்ல நேரிடும்.
எனவே அந்தந்த
பட்டயப் படிப்பு முடித்தவர்களை அவரவர் தகுதிக்கான வேலையில் இருந்து கீழ் நிலைக்கு மாற்றுவது என்பது முற்றிலும் முரணான ஒன்று.
ஆகையால்
அரசின் தவறான இந்த முடிவை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.அரசு இதற்கான உத்தரவை உடன் திரும்ப பெற வேண்டுமென்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அரசை வலியுறுத்துகிறது.
பாவலர் க.மீனாட்சிசுந்தரம்Ex.mlc
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
தனி மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி~ முதல்வர் அறிவிப்பு...
தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.
விழுப்புரத்தை விட்டு பிரித்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் எடிப்பாடி பழனிசாமி.
கள்ளக்குறிச்சியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடங்கும்
விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைய உள்ள கள்ளக்குறிச்சி, தமிழகத்தில் 33-வது மாவட்டமாக உதயமாகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)