புதன், 16 ஜனவரி, 2019
ஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்..
தலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு? பட்டியல் தயாரிக்க கல்வித்துறை உத்தரவு...
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களில் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2012 மற்றும், 2013ம் ஆண்டின் படி, பணி வரன் முறை செய்யப்பட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ தகுதி பெறாதவர்களின் பெயர்களை, 2019 ஜன., 1ம் தேதி நிலவரப்படி, இனம் கண்டு பரிந்துரைக்க வேண்டும்.
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஏதேனும் ஒன்றுக்கும் மட்டும் தகுதியானவர். மேற்கண்டவர்கள் பெயர்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு செய்ய வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது. முதன்மை கல்வி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, விபரமளிக்க வேண்டும், இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 164 உயர்நிலை, மேல்நிைலப்பள்ளிகள் உள்ளது. இதிலிருந்து, பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் விவரம் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுமென, சி.இ.ஓ., அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
வருமானவரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்...
கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு அமல்...
அரசு தொழிற்கல்வி ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பலன்கள்~ மத்திய அரசு ஒப்புதல்…
தபால் துறையின் வங்கி சேவைக்கு செயலி அறிமுகம்~வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம்…
'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் புதிய வங்கி சேவை பயன்பாட்டிற்கென அலைபேசி செயலியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க இந்திய தபால் துறை சார்பில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் வங்கி சேவை புதிதாக துவங்கப்பட்டது.
இவ்வங்கியில் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு கணக்கை துவங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை டிபாசிட் செய்யலாம். பண பரிமாற்றங்களுக்கு, தபால் துறை வங்கியில் பணம் எடுக்க எவ்வித கட்டணமும் கிடையாது. கடன் மற்றும் கிரெடிட் கார்டு கிடையாது. பொதுத்துறை வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற சேவைகள் வழங்கப்படும். பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் அந்த வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்யலாம். புதிதாக கணக்கு துவங்க ஆதார் கார்டு எண் மட்டும் போதும்.
ஐ.பி.பி.பி. வங்கி செயலி: தபால் துறை'ஐ.பி.பி.பி.,' எனும் அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியில் அஞ்சலக சேமிப்பு கணக்கின் வரவு செலவுகளை பார்க்கலாம். பிற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும்.
மின்சாரம், அலைபேசி, தொலைபேசி, இன்டர்நெட் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தலாம். மேலும் இதை பயன்படுத்தி ஆதார், பேன் எண்ணை இணைத்தல், வாரிசு, முகவரி மற்றும் இமெயில் மாற்றமும் செய்யலாம். போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசு தின விழா நாளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம்~ பள்ளிக்கல்வி இயக்குனர்…
குடியரசு தின விழா நாளில் பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் ஜன.,26ல் குடியரசு தினவிழா நாளில் பள்ளிகளில் கூட்டம் நடத்த வேண்டும். இதே போல் ஆக.,15, நவ. 14., தேதிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மாணவர்கள், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்கள் கற்றல் அடைவு, தனித்திறமையை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் விவாதிக்க வேண்டும். மேலும் தேர்ச்சி விகிதத்தில் குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும். இக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநில பெற்றோர் -ஆசிரியர் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் ரமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்!
சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.
சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.