வெள்ளி, 18 ஜனவரி, 2019

PG IMPORTANT PROCEEDINGS...

மாண்டிசோரி கல்விமுறை...

காலிப்பணியிடம் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை~ பட்டியல் அனுப்ப உத்தரவு…

EMIS இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும்  ~முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித் துறை உத்தரவு…

புதன், 16 ஜனவரி, 2019

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தொலைந்தால் டூப்ளிகேட் மதிப்பெண் சான்றிதழை சொந்த மாவட்டத்திலேயே பெறலாம்~உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வசதி…

Income tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரும்?

வருமானவரியை மிச்சம் பிடிக்க 80 சி யின் கீழ்விலக்கு அளிக்கப்பட்டுள்ள சேமிப்புகளின் விவரம் பின் வருமாறு:

வருமான வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்க சிலசேமிப்புக்கள் 80 சி பிரிவின் கீழ் உள்ளன. அவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதன் மூலம் அதிக வரி செலுத்தாமல் தவிர்க்க முடியும். அத்தகைய சேமிப்பு இனங்கள் குறித்து நாம் இப்போது காண்போம்

1. ஆயுள் காப்பீட்டு பிரிமியம்

2. பொது பிரவிடண்ட் ஃபண்ட்

3. ஊழியர் பிராவிடண்ட் ஃபண்ட்

4. சுகன்யா சம்ரிதி திட்டம்

5. தேசிய சேமிப்பு பத்திரம் (இதில் வட்டி, முதலீடு இரண்டுக்குமே விலக்கு உண்டு)

6. வங்கிகள், தபால் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் 5 வருட வைப்பு தொகை

7. முதியோர் சேமிப்பு திட்டம்

8. யுனிட்டுகள் மூலம் காப்பீடு

9. முதலீட்டு சேமிப்புக்கள்

10. ஓய்வூதியம்

11. குழந்தைகளின் கல்விச் செலவு (இரு குழந்தைகளுக்குமட்டும்)

12. வீட்டு வசதிக் கடன் முதல் திரும்பி செலுத்துதல்இவை அனைத்தும் இணைந்து வருடத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். அல்லது ஒரே இனமாகவும் விலக்கு பெற முடியும்.

 

ஆசிரியருக்கு பயோ மெட்ரிக் பதிவு வந்தாச்சு...

மதுரை மாவட்டத்தில் ஜன., 21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு துவங்கவுள்ளது.

மாநில அளவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 261 பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 2 வீதம் 113 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தவிர முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலுார், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.

ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் மற்றும் எட்டு 'டிஜிட்' கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் அல்லது அலுவலர்கள் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு வைக்கும் போது 'கோடு எண்கள்' மட்டுமே ஸ்கிரீனில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரத்யேக பயிற்சி பெற்ற 10 கணினி பயிற்றுனர்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.

கல்வி அலுவலகங்களில் காலை 10:00 மணிக்குள் அதிகாரிகள், அலுவலர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். 

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்...

ஜனவரி 22 முதல் நடைபெறப்போகும் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்...

ஜனவரி 20ம் தேதி சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்..

சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் எனப்படும் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும் நிகழ்வு வருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் நிகழும் வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன்
குளிர்காலத்தில் தெரியும் பௌர்ணமி நிகழ்வை அமெரிக்க பூர்வகுடி மக்கள் வுல்ஃப் மூன் என அழைத்து வருகின்றனர். 

சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமியானது பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்குக் கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழலானது நிலவின் மீது விழும். அப்போது நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனை ப்ளட் மூன் என ஆய்வாளர்கள் கூறுகிறார். இந்த ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம் தான் சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் ஆகும். 

அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும் எனக் கூறப்படுகிறது.
 
ப்ளட் மூன்
இந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்றரை மணி நேரம் வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

ஆசியாவில் பல இடங்களிலும் இந்த சூப்பர் ப்ளட் வுல்ஃப் மூன் தெரிய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் வான் அதிசய நிகழ்வு இதுவாகும். இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் மட்டுமே தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு? பட்டியல் தயாரிக்க கல்வித்துறை உத்தரவு...

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களில் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, 2012 மற்றும், 2013ம் ஆண்டின் படி, பணி வரன் முறை செய்யப்பட்டு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ அல்லது உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவோ தகுதி பெறாதவர்களின் பெயர்களை, 2019 ஜன., 1ம் தேதி நிலவரப்படி, இனம் கண்டு பரிந்துரைக்க வேண்டும்.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஏதேனும் ஒன்றுக்கும் மட்டும் தகுதியானவர். மேற்கண்டவர்கள் பெயர்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு செய்ய வேண்டும்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிந்துரைக்க கூடாது. முதன்மை கல்வி அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, விபரமளிக்க வேண்டும், இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், 164 உயர்நிலை, மேல்நிைலப்பள்ளிகள் உள்ளது. இதிலிருந்து, பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் விவரம் ஒரு வாரத்தில் தேர்வு செய்யப்படுமென, சி.இ.ஓ., அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.