செவ்வாய், 22 ஜனவரி, 2019
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 7அம்சக் கோரிக்கைகள்~ திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடம் பெருந்திரள் முறையீடு...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில் பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்ட தொடர்போராட்டங்களை நடத்த உள்ளது.
அதில் முதல்கட்டமாக 21.1.2019 பிற்பகல் 5 மணிக்கு திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து பெருந்திரள் முறையீடு.இச்சந்திப்பில் மாநில மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
திங்கள், 21 ஜனவரி, 2019
திருச்சி~ ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள்…
22.01.19 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
22.01.19 (செவ்வாய்) முற்பகல் 10.00 மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.
23,24.01.19 (புதன்,வியாழன்) மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.
25.01.19 (வெள்ளி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.
மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.
26.01.19(சனி) சென்னையில்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.
ஞாயிறு, 20 ஜனவரி, 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)