சனி, 2 பிப்ரவரி, 2019
வெள்ளி, 1 பிப்ரவரி, 2019
2019~2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்...
2019-2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்...
* 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு.
* இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி.
* பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
* உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் 6-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்.
* நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைப்பு.
* ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டு உள்ளது.
* உற்பத்தி மதிப்பில் 5.6% ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 % ஆக குறைப்பு.
* வங்கித்துறையில் சீர்திருத்த நடவடிக்கையால் வாராக்கடன் குறைந்துள்ளது.
* ரியல் எஸ்டேட்டில் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றியதால் வெளிப்படை தன்மை.
* 5 லட்சம் கிராமங்களில் கழிவறைகள் அமைத்து சுகாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* வங்கிகளின் வாராக்கடன் ரூ.3 லட்சம் கோடி மீட்பு.
* உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு.
* 23,900 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தியா.
* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.
* கிராம சாலைகள் அமைக்கும் திட்டம் 3 மடங்காக உயர்வு.
* கிரமபுற சாலைகள் அமைக்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.
* 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அறிமுகம்.
* கடந்த 4 ஆண்டுகளில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1.53 லட்சம் விடுகள் கட்டுப்பட்டுள்ளன.
* 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அரியானாவில் அமைய உள்ளது.
* சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் சிறப்பு திட்டம்.
* ரூ.6,000 உதவி திட்டம் மூலம் ரூ.12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும்.
* சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
* நேரடி வருமான உதவி திட்டம் செயல்ப்படுத்தப்படும்.
* கால்நடை வளர்ப்பு மற்றும் மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.
* 22 விளைபொருட்களின் ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
* இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம்.
* பொருளாதார வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் வழங்க நடவடிக்கை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)