வெள்ளி, 8 பிப்ரவரி, 2019
புதன், 6 பிப்ரவரி, 2019
பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் அமலாகிறது...
நாடு பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்சாரம் திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும், முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரீசார்ஜ்:
இத்திட்டத்தில் பயன்படும் மீட்டர், 'ஸ்மார்ட் பிரீபெய்டு மீட்டர்' எனப்படும். மொபைல் போன்களுக்கு, 'ரீசார்ஜ்' செய்வது போல், மின் கட்டணத்தையும், 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தால், மின் வினியோக நிறுவனங்களுக்கு, முன்கூட்டியே பணம் கிடைப்பதால், அவற்றுக்கும் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் திட்டப்படி, எல்லா வீடுகளிலும் கட்டாயமாக பொருத்தப்பட உள்ள, ஸ்மார்ட் மீட்டர்கள், ஒரு நாளின் வெவ்வேறு சமயத்தில் பயன்படுத்தப்படும் மின்சார அளவை பதிவு செய்து, மின் வினியோக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்.
திட்டம் :
அதை, வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள முடிவதால், அதற்கேற்ப, பின் வரும் நாட்களில், மின் பயன்பாட்டை, அவர்கள் திட்டமிட முடியும்.'பிரீபெய்டு' முறை என்பதால், வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப, மாத கணக்கில் அல்லது தேவைப்படும் நாள் கணக்கில் மின் கட்டணத்தை, 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 2 முதல் கூகுள்+ சேவை நிறுத்தப்படுகிறது...
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின், கூகுள்+ சேவை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4 முதல் கூகுள் பிளஸ் தளத்தில் பயனாளர்கள் பதிவிடுவது நிறுத்தப்படுகின்றது.
கூகுள் பிளஸ் சேவை நிறுத்துவதற்கு முன்பாக படங்கள் மற்றும் முக்கிய தரவுகளை டவுன்லோட் செய்து கொள்ள கூகுள் அனுமதி வழங்கியுள்ளது.. குறிப்பாக கூகுள் பிளசில் தரவேற்றப்பட்ட படங்கள் மற்றும் தகவல்கள் மட்டும் நீக்கப்பட உள்ளது. ஆனால் கூகுள் போட்டோஸ் தளத்தில் உள்ளவை நீக்கப்படாது.
கடந்த அக்டோபரில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பயனர் விபரங்கள் இந்த தளத்தின் பாதுகாப்பு சார்ந்த குளறுபடிகளால் திருடப்பட்டது உறுதியான நிலையில், அந்த தளத்தை நீக்க கூகுள் அறிவித்தது.
பிப்ரவரி 4 முதல் கூகுள் ப்ளசில் புதிய பயனர்கள் சேர, பயனாளர்கள் பதிவிடும் வசதி நிறுத்தப்படுவதுடன், இந்த தளத்தின் மூலம் பல்வேறு தளங்களில் உள்நுழைகின்ற ஆப்ஷன் வழங்கப்பட்ட முறை நிறுத்தப்படுகின்றது. ஆனால் இந்த தொடர்பு Google sign-in என மாற்றப்பட உள்ளது.
மற்ற தளங்களில் செயல்பட்டு வரும் கூகுள் பிளஸ் கமென்ட் பாக்ஸ் முறை மார்ச் 7 முதல் நிறுத்தப்பட உள்ளது. ஜி சூட் எனப்படுகின்ற தொழில்முறை சார்ந்த சேவை தொடர்ந்து ஜி பிளஸ் கனக்கில் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது.
பிப்ரவரி 8-இல் குடற்புழு நீக்க தினம்~தமிழகத்தில் குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு…
மாநிலம் முழுவதிலும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.8) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், இம்முறை பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
அதனால் அங்கு முகாம் நடத்தி மருந்துகளை வழங்க இயலாது. எனவே, நிகழாண்டில் குடற்புழு நீக்க மாத்திரை அளிக்கும் திட்டத்தை 8-ஆம் தேதி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசுசார் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 2.26 கோடி குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அதை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் விடுபட்டவர்களுக்கு அடுத்தகட்டமாக பிப்ரவரி 14-ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி ஊழியர்களும், 58 ஆயிரத்து 358 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதும், அசுத்தமான உணவுகளை உண்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பதும் குடற்புழுக்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதைத் தடுக்கும் பொருட்டே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை பிரச்னை வராமல் காக்க முடியும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமன்றி, குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் உடல் வளர்ச்சிக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பெரிதும் உதவுகின்றன என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு குடற்புழு நீக்க திட்டத்தின் கீழ் மாத்திரைகள் அளிப்பதோடு நில்லாமல் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், சுகாதாரம் பேணுவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)