புதன், 13 பிப்ரவரி, 2019

*🌷தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீள பணியமர்த்துவது குறித்து மறுஆய்வு செய்து நடவடிக்கை கோருதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


2019 ஆண்டு விழா கொண்டாட பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் இயக்குநர் நெறிமுறைகள்



பள்ளிக் கல்வித்துறை- வேலை நிறுத்தம்-ஜேக்டோ ஜியோ அமைப்பினால் 22.01.2O19 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்பட்டமை-தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மீளப் பணி அமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோருதல் சார்பாக...

🌷தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீள பணியமர்த்துவது குறித்து மறுஆய்வு செய்து நடவடிக்கை கோருதல் சார்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


ஆசிரியர்மன்றம் காப்பீர்!ஆசிரியர்நிலை மேம்பாடு காண்பீர்!!

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளரின்  கூட்டமைப்பு பங்களிப்பு
,பங்கேற்பு குறித்து  நாமக்கல் மாவட்டத்தில்  சமீன்தார் மனப்பாங்கு கொண்ட சிலர் தேவையற்ற விமர்சனங்களை காழ்ப்புணர்வோடு  முன்வைத்து வருகின்றனர்.
உள் நோக்கமுடன் விசக்கருத்துகளை பரப்பிவருகின்றனர். அவதூறுகளை அள்ளி விதைத்து அமோகமாக அறுவடைச்செய்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.
கூட்டமைப்புப் போராட்டத்தில் பங்கேற்றோருக்கு ஏதாவது பயனும்,பலனும் பெற்றுத்தர வாய்ப்புண்டா?வழியுண்டா?என்று அதற்கான தளத்தில்  திடமான மனநிலையில் நின்று சேவையாற்றி வரும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் ,ஆதரவு தந்து பாதிப்பைப் களைய என்ன வழியுண்டு?என்று இயக்க ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும்  ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளரை முடக்கிப்போடும் வகையில் ,
கல்வித்துறை அதிகாரிகளோடு கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டும்,
ஆசிரியர்களிடம் தவறான தகவல்களை தந்துக்கொண்டும் வாய்சவடால் அடித்துக்கொண்டு காத்திருக்கின்றனர்.
தங்களின் சொந்த ஆதாயத்திற்கு,
தங்களின் சொந்த சங்கத்தின் ஆதாயத்திற்காக போராட்டக்காலத்தில் திறம்பட செயலாற்றிய ஆசிரியர்மன்ற மாவட்டச்செயலாளரை சிறுமைப்படுத்திட  அலைபவைகள் பசுந்தோல் போர்த்திய வண்ணமும்,
எண்ணமும் சிதைந்து உருமாறிய குள்ளநரிகள் ஆகும். 
இவைகள் 
 ஆவலாய்,
ஆசையாய் நப்பாசையோடு 
வலம் வருகிறது. இவைகளுக்கு ...ஆம், இவைகளுக்கு எக்காரணம் கொண்டு இடமளித்து விடாதீர்! அடையாளம்
கண்டு தோலுரித்துக்காட்டுவீர்!
இவைகளை அம்பலப்படுத்துங்கள்;
இவைகளின் நச்சுக்கருத்துகளை
புறந்தள்ளுங்கள்;
கணக்காயர் நிலை மேம்பாடு பெற்றிட 
ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்.
பாவலர்.திரு.க.மீ.,
அவர்களின்
 வழிகாட்டுதலில்  தொடர்ந்து தொண்டாற்றுங்கள்; 
முன்னேற்றம்  காணுங்கள்.

*வாய்மையேவெல்லும்!

*நாம்வெல்வோம்!

*நாளை நமதே!
          நன்றி.
              -முருகசெல்வராசன்

தேசிய பசுமைப்படை - நாமக்கல்/ திருச்செங்கோடு கல்வி மாவட்டங்கள் உலக ஈர நில நாள் (பிப்ரவரி 2) தொடர்பான ஒருநாள் (13.02.2019) பயிற்சி முகாம்-தகவல்- சார்பு....