திங்கள், 18 பிப்ரவரி, 2019

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள் -தமிழக அரசு அறிவிப்பு




5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு -கல்வித்துறை தீவிரம்

🔥🔥நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது.

இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இந்தநிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் நாடு முழுவதும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது என்ற தகவல் கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியானது. இதையடுத்து மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் இந்தப் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து தமிழகத்தில் கட்டாயத் தேர்வு முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுத்தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இருப்பினும் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்படவுள்ள தேர்வு மையங்கள், பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு பள்ளியில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் இருந்தால் அங்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும்.

பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே படித்து வருவதால் தேர்வு மையங்களையும் அதற்கேற்றவாறு அருகில் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த முடிவு கல்வியாண்டின் இறுதியில் எடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பயிற்சி, விழிப்புணர்வு என அனைத்து விஷயங்களையும் கொண்டு செல்வதற்கு போதுமான அவகாசம் இல்லையென்பதால் எளிதான வினாக்கள், நெருக்கடியில்லாத மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்கான படிவங்கள்...

RECEIPT OF HOUSE RENT...

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்(கிளை) ~ வட்டார செயலாளர்கள் கூட்டம் ( 16-02-19 )~ நாளிதழ் செய்திகளில்....

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலாளர்கள் கூட்டம் ( 16-2-19 )~ நிகழ்வுகள்....

16-2-19 பிற்பகல் நாமக்கல் கோட்டை துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலாளர்கள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் திரு.
வெ.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது...

நாமக்கல் வட்டாரச் செயலாளர் 
திரு.அ.ஜெயக்குமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் 
திரு.வெ.பாலமுரளி மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர் திரு.பெ.பழனிசாமி ஆகியோர் இயக்க உரையாற்ற...

மாவட்டச் செயலாளர் 
திரு.முருக.செல்வராசன்  அவர்கள்  விளக்க உரை நிகழ்த்த  மாவட்டத் துணைச் செயலாளர்  திரு.வெ.வடிவேல் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஆலோசனை கூட்டம்(16-2-19)~நாளிதழ் செய்திகளில்....

சனி, 16 பிப்ரவரி, 2019

வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை ~ விரைவில் புதிய அப்டேட்...

வாட்ஸ் அப் நிறுவனம், குரூப்களில் புதிய நபர்களை சேர்க்கும் முறையில் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

 வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டாக குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை என்ற முறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் தற்போது யார் வேண்டுமானாலும் தங்களது கணக்கில் இருக்கும் வாட்ஸ் அப் பயனர்களை குரூப்பில் சேர்த்து அட்மினாக ஆகலாம். இந்த முறை மூலம் நமக்கு விருப்பம் இல்லாத குரூப்பில் கூட நாம் இடம்பெற வேண்டி இருக்கும்.

இந்நிலையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வாட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த அப்டேட் வர உள்ளது. 

Settings...

1. வாட்ஸ் அப் செட்டிங்சில் உள்ள பிரைவசி பகுதியில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்படும். (WhatsApp Settings > Account > Privacy > Groups)

 2. யாரெல்லாம் உங்களை குரூப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதாவது Everyone, My Contacts, Nobody என்று இருக்கும். 

3. அதில் உள்ள Nobody என்ற ஆப்ஷனை நாம் தேர்ந்தெடுத்தால் யாராக இருந்தாலும் உங்களது அனுமதிக்கு பின்னரே குரூப்பில் சேர்க்க முடியும்.

 4. நீங்கள் எந்த பதிலும் கொடுக்காதபட்சத்தில் அவர்களின் அனுமதி கோரிக்கை 72 நாட்கள் வரை மட்டுமே காத்திருக்கும்.


மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் ~ தமிழக அரசு அறிவிப்பு…

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான்-ஆதார் இணைப்பு கட்டாயம் ~ மார்ச் 31ம் தேதி வரை கெடு ~ வரிகள் ஆணையம் உத்தரவு…