வெள்ளி, 1 மார்ச், 2019

*வருமானவரி உபரித்தொகை திரும்பப்பெற புது நிபந்தனை*

வருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை

வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகையை திரும்ப பெறுவதற்கு, வங்கி கணக்குடன், 'பான்' எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.


வருமான வரி செலுத்துவோரிடமிருந்து, சில நேரங்களில், அவர்களுக்கான வரித் தொகையை விட, கூடுதலான தொகை, முன்
கூட்டியே பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.


இவ்வாறு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, வாடிக்யைாளர் அளித்த வங்கி கணக்கு விபரங்கள் அடிப்படையில், வங்கி யில் நேரடியாக செலுத்தப்பட்டும், காசோலை யாகவும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:


இன்று முதல், வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகை, 'இ - சேவை' முறையில், நேரடியாக, சம்பந்தப் பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


எனவே, வருமான வரி செலுத்து வோர், தங்கள் வங்கிகணக்குடன், 'பான்' எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையெனில், பிடித்தம் போக, மீதமுள்ள தொகை திரும்ப செலுத்தப்படாது.

வரி செலுத்துபவர், தங்கள் கணக்கு உள்ள வங்கி
கிளைக்கு சென்று, வங்கி கணக்குடன், 'பான்' எண் இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது.


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வ தற்கு, 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணை, இம் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என, வருமானவரி துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

பள்ளி நாட்காட்டி மார்ச் - 2019...

மூத்த குடி மக்கள் சுலமாக பேங்கிங் செய்யும் வசதியை அளிக்குமாறு வங்கிகளை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது...

அழிக்க முடியாத 'தேர்தல் மை'...

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) -2019 ~ NOTIFICATION…

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை - தமிழ்நாடு தேசிய பசுமைப்படை - காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பசுமைப்படை செயல்படும் பள்ளிகளுக்கு 2018 -19 ஆம் கல்வியாண்டிற்கான நிதி ரூ.5000/- வழங்கியது -சார்பு...

வியாழன், 28 பிப்ரவரி, 2019

*12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ~ அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்*

*அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்:*
 *12.ஆம் வகுப்பு பொதுத்தேர்வு*

8.45am
மணிக்கு ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்.

9.30 - 9.40am வினாத்தாள் பெற்றுக் கொள்ளுதல்.

9.45am
( *முதல் மணி* ஒரு முறை அடிக்கப்படும்) நுழைவு சீட்டினை சரிபார்ப்பு.

9.50am
 சிறப்பு அறிவிப்புகள் வழங்குதல்.

9.55am
 ( *இரண்டாவது மணி* இரண்டு முறை அடிக்கப்படும்) வினாத்தாள் கட்டினை பிரித்தல் - மாணவர்களுக்கு முன்பு.

10.00am
( *மூன்றாவது மணி* மூன்று முறை அடிக்கப்படும்)  வினாத்தாள் வழங்குதல்.

10.10am
( *நான்காவது மணி* நான்கு முறை அடிக்கப்படும்) விடைத்தாள் வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் மற்றும் கையொப்பம் இடுவது.

10.15am
( *ஐந்தாவது மணி* ஐந்து முறை அடிக்கப்படும்) தேர்வு எழுதலாம் என அறிவித்தல்.

10.45am/11.15am/11.45am/ மற்றும் 12.15pm
 (ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மணி அடிக்கப்படும்).

12.40pm
 *எச்சரிக்கை மணி* அடிக்கப்படும் அப்போது தேர்வர்களுக்கு வெள்ளை நூல் கொண்டு கட்ட அறிவுறுத்தல்.

12.45pm
long bell  விடைத்தாள் சேகரித்தல்.

🌷TET 2019 ஆம் ஆண்டுக்கான அறிவிக்கை












மார்ச் 2019 நாள்காட்டி


100 சதவீத மானிய தொகை பெற உழவன் செயலியில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் ~ தோட்டக்கலை துறை தகவல்...