பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது என பல வகைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 31ஆம் தேதிக்குப் பின் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கhttps://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று இணைத்துக்கொள்ளலாம்.
ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

Advertisement