ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

*பி.இ.,கலந்தாய்வு :ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது*

*🌷பி.இ., கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது*

*🌷பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🌷பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18 கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.*

*🌷இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்கு அருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர் சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சூரப்பா, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.*

*🌷உயர் கல்வித் துறைச் செயலர் உள்பட பலரின் கார்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பெட்ரோல் நிரப்பப்படுவதை ரத்து செய்தது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ரத்து செய்தது என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை சூரப்பா எடுத்தார். இது பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தனைச் சேர்த்தும், மேலும் சில அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தும் உயர் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.*

*🌷இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக 2019-20 கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.*

*🌷இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 31ம் தேதி கடைசி நாளாகும்.*

தொடங்கும் கோடை மழை ~ தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் ~ இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும் ~ பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு…

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு ஜூன் 14ல் தொடக்கம் ~ தனித்தேர்வர்கள் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு...

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு 23, 24ம்தேதி விண்ணப்பிக்கலாம் ~ பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

வேளாண்துறை படிப்புக்கு ஜீலை 1ல் நுழைவுத்தேர்வு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

*வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு*

கோவை: வேளாண் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு, வரும், ஜூலை, 1ல் நடக்கிறது. இந்த அரிய வாய்ப்பை தமிழக மாணவர்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வாயிலாக நடத்தப்பட்டது. நடப்பாண்டு முதல், தேசிய நுழைவுத்தேர்வுகள் ஒருங்கிணைப்பு ஆணையமான, என்.டி.ஏ.,விடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏப்., 1 முதல் 30ம் தேதி வரை, ஆன்லை' மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கட்டணம், 700 ரூபாய். எஸ்.சி., - எஸ்.டி., - திருநங்கைகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, 350 ரூபாய்.விண்ணப்பங்களில் பிழைகளை திருத்த, மே 7 முதல், 14 வரை, வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும்போது, இ--மெயில்&' மற்றும் தொலைபேசி எண்களை கவனமாக பதிவு செய்ய வேண்டும்; இவற்றின் வாயிலாகவே மாணவர்களுக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும்.

வேளாண் படிப்பிற்கு, ஆண்டுதோறும் இந்த நுழைவுத்தேர்வு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 2,000க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படுகின்றன.ஆனால், தமிழக மாணவர்கள் மத்தியில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பிற மாநில மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவதாக, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் அவசியம் எழுத வேண்டும். மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் பட்டப்படிப்பை முடிக்கலாம். நாடு முழுவதும், 75 வேளாண் பல்கலைகள் உள்ளன.பல்கலையின் மொத்த இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

வேளாண் படிப்பில் சேர திட்டமிட்டுள்ள தகுதியான மாணவர்கள் அனைவரும் இத்தேர்வை எழுதலாம்.விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை, www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

+12 மாணவர்களுக்கு பயனுல்ல அரசு கல்லூரிகள் மற்றும் தூழைவு தேர்வு , மற்றும் சேர்க்கை விவரம்