செவ்வாய், 23 ஏப்ரல், 2019

10ம் வகுப்பு, மேனிலை வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு ~ அட்டவணை வெளியீடு…

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவி மே 4ம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம்~ TNPSC அறிவிப்பு…

EMIS இணைய தளத்தில் மாணவர்களுக்கு அடுத்த வகுப்பிற்கு PROMOTE வழங்கும் விளக்கம்...

EMIS இணைய தளத்தில் மாணவர்களுக்கு PROMOTE வழங்கும் போது தொடக்கப்பள்ளிகள் 5 ஆம் வகுப்பில் இருந்தும் , நடுநிலைப்பள்ளிகள் 8 ஆம் வகுப்பில் இருந்தும் உயர்நிலைப்பள்ளிகள் 10ம் வகுப்பிலிருந்தும் மேல்நிலைப்பள்ளிகள் 12ஆம் வகுப்பிலிருந்தும்
PROMOTE வழங்க ஆரம்பிக்கவும்

(முதல் வகுப்பில் இருந்து துவங்கினால் முதல் வகுப்பில் promote செய்யப்பட்ட மாணவர்கள் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பட்டியலில் கலந்து விடுகிறார்கள்)

துவக்கப்பள்ளிகள் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ,நடுநிலைப்பள்ளிகள் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், உயர்நிலைப்பள்ளிகள் 10ஆம் வகுப்பு  மாணவர்களுக்கும்,மேல்நிலைப்பள்ளிகள் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் move to common pool தேர்வை தெரிவு செய்யவும்.

மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்யும் முன்பாக கவனிக்க வேண்டியவை:

1.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கையும் PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும்.

 2.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கை PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் class &sections பகுதிக்கு சென்று add class &section மூலம் புதிய பிரிவுகளை சேர்க்கவும்.

3.தற்போது படிக்கும் வகுப்புகளின் (2018-2019)பிரிவுகள் (sections) எண்ணிக்கை PROMOTE செய்யப்படும் வகுப்புகளின் (2019-2020)பிரிவுகள் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தால் class &sections பகுதிக்கு சென்று மாணவர்கள் எண்ணிக்கை 0 உள்ள பிரிவுகளை Delete செய்யவும்.

Click here for video...

பூமியின் அளவில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு...

ஜூன் 20ல் இன்ஜினியரிங் கவுன்சலிங் ~ மே 2 முதல் விண்ணப்பிக்கலாம்…

திங்கள், 22 ஏப்ரல், 2019

அனைத்து எமர்ஜென்சிக்கும் ஒரே நம்பர் 112 ~ தமிழகத்தில் அமல்.....

இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக செயல்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 112 என்ற அவசர உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதில், தனிநபர் ஒருவருக்கு அவசர சேவை தேவைப்படும்போது 112 என்ற எண்ணை அழைக்கலாம். 

இதன் மூலம், போலீசுக்கு 100, தீயணைப்புக்கு 101 மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090 ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் இந்த சேவை செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல் சேவைக்காக தொடங்கப்பட்ட இந்த எண்ணை வேடிக்கைக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

*பி.இ.,கலந்தாய்வு :ஜூலை 3 ஆம் தேதி தொடங்குகிறது*

*🌷பி.இ., கலந்தாய்வு: ஜூலை 3ஆம் தேதி தொடங்குகிறது*

*🌷பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🌷பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தக் கலந்தாய்வு 2017-18 கல்வியாண்டு வரை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் சென்னையில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் பெற்றோருடன் சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதில் ஏற்படும் பல்வேறு சிரமங்களைப் போக்கும் வகையில், கடந்த கல்வியாண்டில் ஆன்-லைன் பி.இ., கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.*

*🌷இந்த புதிய நடைமுறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே, கலந்தாய்வில் பங்கேற்கும் வசதி ஏற்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மட்டும் குறிப்பிட்ட நாளில், வீட்டுக்கு அருகில் இருக்கும் கலந்தாய்வு உதவி மையத்துக்கு மாணவர் சென்றால் போதும் என்ற நிலை உருவானது. இதற்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அதிவேக வலைதள வசதியுடன் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்ற சூரப்பா, பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்துக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.*

*🌷உயர் கல்வித் துறைச் செயலர் உள்பட பலரின் கார்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பெட்ரோல் நிரப்பப்படுவதை ரத்து செய்தது, பணியாளர் நியமனத்தில் அரசியல் தலையீட்டை ரத்து செய்தது என பல்வேறு அதிரடி  நடவடிக்கைகளை சூரப்பா எடுத்தார். இது பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், பி.இ., கலந்தாய்வை நடத்தும் கலந்தாய்வுக் குழுவில் இணைத் தலைவராக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தனைச் சேர்த்தும், மேலும் சில அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தும் உயர் கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.*

*🌷இந்த உத்தரவு, பி.இ., கலந்தாய்வுக் குழுவின் தலைவராக இருக்கும் தனக்குத் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாக துணைவேந்தர் சூரப்பா புகார் தெரிவித்ததோடு, குழுவின் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்வதாகவும் அறிவித்தார். இதன் காரணமாக 2019-20 கல்வியாண்டுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.இ. கலந்தாய்வு நடத்தும் பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தும், அண்ணா பல்கலைக்கழகத்தை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தும் உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.*

*🌷இதன் காரணமாக 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்த உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் 42 கலந்தாய்வு உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் நிகழ் கல்வியாண்டு (2019-2020) பொறியியல் சேர்க்கைக்கான பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு மே 31ம் தேதி கடைசி நாளாகும்.*

தொடங்கும் கோடை மழை ~ தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் ~ இந்திய வானிலை மையம் அறிவிப்பு…

எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்பிலும் மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும் ~ பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு…

தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வு ஜூன் 14ல் தொடக்கம் ~ தனித்தேர்வர்கள் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு...